ஒரு சில படக்குழுவினரின்
தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும்.
பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ’மை’யா எழுதுவாங்க. அதுவே நம்ம படத்துக்கு நல்ல ஓபனிங் அ’மை’ய உதவும் என்ற எண்ணத்துடன் படம் ரிலீஸாவதற்கு ஒரு
வாரம் முன்பே பிரிவியூ போட்டுவிடுவார்கள்.
அப்படி
கடந்த வாரம் அ’மை’ந்த படம் தான்
‘மை’. இலக்கணம், கிராமர்
மிஸ்டேக் போன்ற ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தும் இன்னும் யாரோ போல் அலையும் விஷ்ணுப்ரியன் குட்டி மேடைப்பேச்சாளனாக நடித்திருக்கிறார்.
அவருக்கு ஜோடி ஸ்வேதா பாசு.இதுக்கு முந்தி இவர் நடித்திருந்த ஒரு மொக்கைப்படத்தை முக்கி முக்கி யோசித்தும் நினைவுக்கு வரவில்லை.
’’சுடுகாட்டுல
எரியிற பொணம் கூட கடைசியா ஒருமுறை எந்திரிச்சி நிக்கப்பாக்குது. நீ உயிரோட தான இருக்க,
போராடி ஜெயிக்க மாட்டியா’ என்று வெட்டியாய் அலையும்
ஹீரோ விஷ்ணுவை, சுயகவுரவம் என்னும் ஜட்டியோடு அலையும்படி தூண்டி விடுகிறாள் ஹீரோயின் ஸ்வேதா.
காதலி
கடைக்கண் காட்டினால், கடையனும் கல்வி அமைச்சர் ஆகிவிடும் சினிமா அல்லவா தமிழ்சினிமா?
எனவே அவ்வளவு
நாளும் தனது ஏரியாவில் வீட்டுகேட்டு,பம்புசெட்டு,கேபி ள் ஒயர் என்று கண்டதையும் திருடி தின்று
வந்த ஹீரோ, சின்ன திருட்டுகளில் இருந்து திருந்த முடிவெடுத்து,பெரிய திருடனாகும் முடிவுடன்
கவுன்சிலர் தேர்தலில் நிற்கிறார்.’
‘’ எனக்கு ஓட்டுப்போட்டு கவுன்சிலராக்கினால், இனி உங்கள்
வீட்டுப்பொருள் திருட்டுப்போகாது’’ என்று மக்களிடம் அவர் உத்தரவாதம்
அளித்தவுடன் அவரையே ஜெயிக்க வைக்கிறார்கள்.
கதை வேலூரில்
நடக்கிறது. மொத்தம் 41 வார்டுகள் உள்ள வேலூரில் ஆளுங்கட்சி 20, எதிர்க்கட்சி20
என்று சம்மாய் ஜெயிக்க, இப்போது மேயர் பதவியில்
அமர, நம்ம ஹீரோ சுயேச்சையின் தயவு தேவைப்படுகிறது.
சின்ன
வயசிலேயே காதலியின் உம்மாவை பத்துப்பத்து ரூபாய்க்கு விக்கப்பாத்த தில்லாலங்கடியாச்சே
நம்ம ஹீரோ, அந்த
அரசியல் குயப்ப நிலையைப்பயன்படுத்தி தானே மேயர் ஆகிவிடுகிறார்.
இவ்வளவும்
கண்ட அசதியில், சற்றே கண்ணயர்ந்து விழித்தபோது, நடுவில் என்ன ரணகளங்கள் நடந்ததோ தெரியவில்லை நம்ம ஹீரோ
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிக்கொண்டிருந்தார், இந்தக்கதையை ஏற்கனவே பலமுறை
கேட்டதாலோ அல்லது கதைக்காகவோ மெண்டலாகியிருந்த கதாநாயகியின் நண்பர் மெண்டல் ஆஸ்பத்திரியிலிருந்து
டிஸ்சார்ஜ் ஆகிக்கொண்டிருந்தார்.
’அவர் டிஸ்சார்ஜ் ஆனதுனால, இடம் வேகன்ஸி கண்டிப்பா இருக்கும் வாங்க போகலாம் என்றபடி
நாங்கள் தியேட்டரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தோம்.
அடுத்து
பார்த்த படம் நம்மை ரொம்ப படுத்த வந்த ‘அடுத்தது’
யாருக்கோ த்ரில் கொடுக்க கொஞ்ச நாளாக காணாமல் போயிருந்த தக்காளி சீனிவாசனின்இயக்கம்.. நடுவில் காணாமல் போனவகையில்
கொஞ்சம் அதிகம் பழுத்த பழமாகவே காணப்பட்டார் தக்காளி..
இவங்களத்தான் அடுத்தடுத்து கொல்றாங்க |
ஒரு சானல்
பத்துபேரை சாகஸ நிகழ்ச்சி ஒன்றுக்காக தேர்ந்தெடுத்து, ஒரு தீவுக்கு அனுப்பிவைக்கிறது.அவர்கள் தங்கும் பங்களாவில்
ஒரு பத்துத்தலை ராவணன் சிலையை வைத்துவிட்டுப்போகும் ஒரு மர்ம நபர், அதைத்தொடர்ந்து காணாமல் போகும் தலைகள், ஒவ்வொரு தலை காணாமல்
போகும்போதும் ஒரு கொலை நடக்கிறது.
இறுதியில்
எதற்காக இந்தக்கொலைகள் நடந்தது என்று அதே அந்நியன் கெட்டப்பில் நாசர் சொல்ல ஆரம்பிக்கும்போது
சஸ்பென்ஸ் த்ரில்லர் சப்பென்று ஆகி, பலமான கொட்டாவி ஒன்று நம்மை கட்டித்தழுவுகிறது.
பங்களாவிலிருந்த
அனைவரும் கொன்று முடிக்கப்பட்ட உடன் அடுத்த டார்கெட்டாக நம்மை மனதில்
வைத்து தான் தக்காளியார் ‘அடுத்தது’ எடுத்ததுவோ?
ஏழைகளெல்லாம், நாம் என்றாவது ஒருநாள் பணக்காரனாகிவிட
மாட்டோமா’ என்று ஏங்குவது மாதிரி,நாம் என்றாவது
ஏழையாகி விட மாட்டோமா என்று ஏங்கக்கூடிய ஒரு சில பணக்காரர்களாவது இருக்க மாட்டார்களா/?
என்ற சந்தேகம் எனக்கு இதுவரை மூன்று முறை வந்து போயிருக்கிறது.
முதல்முறை
உனக்கு 18 எனக்கு20’
படம் பார்த்தபோது, 2வது முறை’ கேடி’ படம் பார்த்த போது, 3வது
முறை நேற்று’ ’ஊ ல ல லா’ படம் பார்த்தபோது.
இவரப்பாத்துதான் ரோட்டுல போற பொண்ணுங்கள்லாம் வாவ்ன்னு வாயைப்பொழக்குதுங்க |
இந்த முத்தான
மூன்று சந்தேகங்களையும் தந்தவர் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்தின் சத்தான
புத்திரடு ஜோதிகிருஷ்ணா.
ஊ ல ல
லா’ படத்தின்
தயாரிப்பாளர்கள் என்று, வேறு இருவர் பெயர்கள் திரையில் காட்டப்பட்டாலும்,’ கதையில் அழிச்சாட்டியும் செய்து பத்து வருடங்களாக மகனிடம் பேசாமல் இருக்கும்
தலைவாசல் விஜயைப் பார்க்கும்போதெல்லாம் ரத்தினம் சாரின் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..
கொடியில் தொங்கிக்கொண்டிருந்த
புடலங்காயை பறித்து வந்த எஃபெக்டில் காணப்படும்,படத்தின் நாயகி என்னமோ ஒரு பண்டாரி பார்க்க சுமாராக இருந்தாலும்’ நடிப்பு ....? தோற்றத்தையும் விட சுமார்தான்.
இந்த சுமார்
ஃபிகரை சோதிகிருஷ்ணா என்ற சூப்பர் பாய் விரட்டிவிரட்டி காதலிக்கிறார்.ஒரு கட்டத்தில் லவ் ஓகே ஆனதும், அவரை மறந்துவிட்டு,ரோடெங்கும் இவரைப்பார்த்து
வாவ்’ என வழியும் மற்ற ஃபிகர்களுடன் மஜா பண்ண கிளம்பி ஃபிகர்கள் ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார் கிருஷ்ணா,
படத்தில் வரும்
சம்பவங்களும் பெயர்களும் மாதிரி,. ரோட்டில் போகிற பொண்ணுங்கள்லாம் ஜோதிகிருஷ்ணாவைப்பார்த்து
ஜொள்ளு விடுவது போன்ற காட்சிகளும் கற்பனையே. அதைப்பார்த்து யார் மனதாவது புண்பட்டிருந்தால்
மன்னிக்கவும் என்று படம் முடியும் தறுவாயில் ஒரு கார்டு போடமாட்டார்களா என்று ஏங்கினேன்.
ஓஹோ சார்,
ReplyDeleteஅது என்ன உங்களை எப்போ பார்த்தாலும் மொக்கைப்படத்துக்கு மட்டும் பிரிவியூ கூப்பிடுவாங்களா சார் :-))
வெத்தலைல மை தடவிப்பார்த்து கதைய கண்டுப்பிடிச்சு இருப்பாங்க போல, ஏற்கனவே புதுமைப்பித்தன், சுயேட்சை எம்.எல்.ஏ னு இதே ஃபார்முலா கதை எல்லாம் வந்து மக்கள் காரித்துப்பிட்டாங்க, என்பதை மறந்துட்டாங்க போல :-))
ஷ்ரிமன் ட்ரிப்பிள்ஸ் அடிக்கிற படத்தில் ஏதும் கில்மா கூடவா தேறலை, இது போல படத்தில எல்லாம் இலை மறைவு "காய் "மறைவா கில்மா சீன் வைப்பாங்களே , தக்காளி காப்பி அடிக்கிறதுனு முடிவு செய்த பிறகு நல்ல படமா பார்த்து அடிக்காம பி.கிரேட் ஆங்கில படங்களை காப்பி அடிக்கிறாரே, அதுல என்ன கஞ்சத்தனம் :-))
இன்னுமா ஏழையாகம இருக்கார் ரத்தினம் :-))
மை நல்லா இருக்குன்னு ஒரு நாதாரி பிரண்டு சொன்னான், அவன..????
ReplyDeleteசில இடங்கள்ல டயலாக்ஸ் நல்லா இருந்துச்சி ...ஃப்ரியா இருந்தா ஒருதடவை பாத்துடுங்க பாஸ்.
ReplyDelete