Monday, April 2, 2012

நயன் தாராவ லவ் பண்ணப்போறேன். ஹெல்ப் பண்ணுங்க பாஸ்






டந்த நாலைந்து ஆண்டுகளில், ஆசியாக்கண்டத்திலேயே அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் நயன் தாராவாகத்தான் இருக்கும். ஆனால் ஒருபோதும் மீடியா மீது எரிந்து விழுந்ததில்லை.எல்லாச் செய்திகளுக்கும் மவுனமே அவரது ஒரே பதிலாக இருந்து வந்தது.மவுனத்தில் விளயாடிய மனசாட்சிக்கு விடைகொடுத்துவிட்டு ஒரு வழியாக முதன்முறையாக பேச ஆரம்பித்திருக்கிறார் நயன். அந்தப் பேச்சில் தெரியும் பக்குவமும், தன்னை ஏமாற்றிய பிரபுதேவாவைப் பற்றி பழி ஏதும் சொல்லாமையும், ‘பேசாம அடுத்து நாமளே நயன் தாராவை லவ் பண்ணலாமா என்று பலரையும் யோசிக்க வைக்கும்.

எனது இணையதளத்துக்காக, ஒரு ஆங்கில தினசரியில் வந்த நயன் தாராவின் பேட்டியை ‘சுட்டு’க்கொண்டிருக்கும்போது, காதலைப் பற்றியும், தன்னை ஏமாற்றியவர் என்பதையும் மறந்து மன்னித்து பிரபுதேவாவைப் பற்றியும் நயன் தாரா பேசியிருந்ததைப் பார்த்ததும் எனக்கு அவர் மீது தீராக் காதல் ஊற்றெடுத்து விட்டது.

இப்போது நான் சிங்கிளாகத்தான் சிங்கிஅடிக்கிறேன்’ என்று அவர் ஒத்துக்கொண்டிருப்பது எனக்கு ’சிங்க’ எனர்ஜியைக்கொடுத்திருக்கிறது.

அதே சமயம் எங்கள் காதலுக்கு, இன்னும் கூட நயன் அழிக்க விரும்பாத பிரபுதேவாவின் ‘பச்சை’ சற்றே இடையூறாக இருக்கும்போல் தெரிகிறது.

அதை மெல்ல அழிப்பதற்கு என்னிடம் கைவசம் ஒரு ஐடியா இருக்கிறது. அதை வெளியே சொல்லி இப்போதைக்கு வில்லனாக விரும்பவில்லை.

சரி, கைவசம் ‘போட்டி’ இருந்தா அதைச்சாப்பிட்டுக்கிட்டே பேட்டியைப் படிங்க... ஆனா  தயவு பண்ணி என் கூட  போட்டிக்கு  வந்துடாதீங்க...

இதோ அந்த ‘லவ்’கீகமான பேட்டி:

கே: ஒரு கட்டத்தில் திருமணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த உங்களுக்கும் பிரபுதேவாவுக்குமான காதல் முறிந்தது எப்படி?
எப்படி என்று சொல்ல? அது அப்படித்தான் நிகழ்ந்தது. என்னுடைய காதலில் மட்டுமல்ல , இது பொதுவாக எல்லோருடைய காதலிலும் நிகழ்வதுதான்.காதல் வயப்பட்டிருக்கும்போது அன்றாடம் சில பிரச்சினைகளை சந்திக்கிறோம். அதில் சிலவற்றை சமாளிக்க முடிகிறது. சிலவற்றை முடிவதில்லை.அப்படி சமாளிக்க முடியாத பிரச்சினைகள் , நாளடைவில் பெரிதாகமுற்றி,  காதலை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகின்றன.அப்படித்
தான் எனக்கும் நடந்தது. அது என்ன விஷயம் என்பது முழுக்க முழுக்க எனது பெர்சனல்.அதை இந்த உலகுக்கு பகிர்ந்து கொள்ள நான் விரும்பவும் இல்லை,அவசியமும் இல்லை. நாளுக்கு நாள் மனிதர்கள் மாறுகிறார்கள், பிரச்சினைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.அதே  போல் எனது இன்றைய பிரச்சினை நான் பிரபு தேவாவுடன் இருந்த காதலிலில் இருந்து விடுபட்டு நிற்பது.அந்தக் காதல் ஒத்துவரவில்லை என்றால் அது அதனளவில் அவ்வளவுதான்.

ஆனால் இப்போதும்  ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன். நான் அவரிடம் காதல் வயப்பட்டிருந்தபோது அதில்  நூறு சதவிகிதம் உறுதியாக உண்மையாக இருந்தேன். அது நமக்கு இல்லை என்று ஆகும்போது, அந்த கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டு, அதைவிட்டு வெளியே வரத்தான் வேண்டும்.

கே: பிரபுதேவாவை காதலிக்கத்துவங்கும்போது, இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று கொஞ்சமாவது எதிர்பார்த்தீர்களா?
நான் மட்டுமில்லை, யாருமே காதலிக்கத்துவங்கும்போது ஒரு பாஸிடிவான எண்ணத்தொடே காதலிக்கத்தொடங்குகிறோம் என்பது தானே நிதர்சனம்.அப்புறம் இப்படி துரதிர்ஷ்டவசமாக முடிவது விதியாலா அல்லது என்னவால் என்று எனக்கு சொல்லத்தோன்றவில்லை.


கே: உங்களுக்கும் அவருக்குமிடையிலான பிரச்சினைகளுக்கு மீடியாவோ அவரது மனைவியோ காரணமென்று கருதுகிறீர்களா?

நடந்த விஷயம் குறித்து நான் மீடியா மீதோ அவர் மனைவி மீதோ பழிபோட விரும்பவில்லை. அவரிடம் அவர் குடும்பம் தொடர்பான சில முடிவுகளை நான் எடுக்கச்சொன்னது உண்மைதான்.அது என்னவென்று இப்போது கூட நான் வெளியில் சொல்ல விரும்புவதில்லை.

மீடியாவைப்பொருத்தவரை நாங்கள் சினிமா நட்சத்திரம் என்பதற்காகவே, எழுதக்கூடாததை எல்லாம் எழுதி எங்களை தர்மசங்கடப்படுத்தினீர்கள். ஆனால் அந்தச்செய்திகள் எனக்கும் பிரபுவுக்குமான உறவைக் கெடுக்கவில்லை. மாறாக நாங்கள் இருவரும் சேர்ந்து வருத்தப்பட்டிருக்கிறோம்.

கே: உண்மையைச்சொல்லுங்கள் பிரபுதேவா நம் வாழ்க்கையில் இல்லை என்று தெரிந்த அந்த கணத்தில் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

காதல் வயப்பட்டு தோற்ற அனைவருக்கும் இருந்த அதே உணர்வுதான் எனக்கும் இருந்தது என்றே நினைக்கிறேன்.அந்த கணத்தில் நான் வேறோடு பிடுங்கி எறியப்பட்டதுபோல் உணர்ந்தேன்.அது கொஞ்ச நேரம் தான். பிறகு சுய நினைவுக்கு வந்த போது, சகஜமாகிவிட்டேன். பிரபுதேவா இல்லாவிட்டாலும் என் வாழ்க்கையை தொடர்ந்து நான் வாழத்தான் வேண்டும் என்ற நிதர்சனம் உறைக்க சகஜமாகிவிட்டேன்.

கே: இப்போது நீங்கள் தனித்து விடப்பட்ட உணர்விலிருக்கிறீர்களா?

மூன்றரை வருடங்கள் உடன் இருந்தவர் விட்டுப்பிரியும்போது அந்த உணர்வு இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன்.அந்த உணர்விலிருந்து முற்றிலும்  நான் வெளியே வர சில காலமாகலாம்.கண்டிப்பாக வருவேன்.

கே: இதிலிருந்து ஏதாவது பாடம் கற்றுக்கொண்டீர்களா?

கொண்டேன். ஆனால் உங்களுக்கு அதைச்சொல்ல மாட்டேன். [ மவனே நீயும் லவ் பண்ணி சாவு ?]

கே:இதன் பிறகு காதல்’ என்பது பற்றிய உங்கள் மதிப்பீடு மாறிவிட்டதா?

அது ஏன் மாற வேண்டும். காதல் அதனளவில் எப்போதும் புனிதமானது.இப்போதும் சொல்கிறேன். காதலுக்காக நான் எதையும் செய்ய துணிவேன்.

கே: பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்திக்கொண்டீர்களே அதை அழித்துவிட்டீர்களா?

இல்லை. அதுபற்றி நான் இப்போது சிந்திக்கவேயில்லை. இதோ அந்தப் பச்சை இருந்த இடத்தில் அப்படியேதான் இருக்கிறது.

அவர் காட்டிய போது, பேசாம உங்க பேரை நயன் தாராளம்னு மாத்தீக்கங்க என்று சொல்லலாம் போலிருந்தது.

மேடம் ஒரு கேள்வி கேட்க மறந்து போச்சி, தொடர்ந்து நடிகர்களையே காதலிச்சி ஏமாறுறீங்களே , ஏன் எதாவது ஒரு நல்ல பத்திரிகையாளரை, அதுவும் அவருக்கு புள்ளகுட்டிங்க இருந்தாக்கூட நீங்க ஏன் லவ் பண்ணி லைஃப்ல செட்டிலாகக்கூடாது?

அடுத்த முறை நயன் தாராவப்பாக்குறப்போ இப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டு என் வாழ்க்கையில யாராவது விளக்கு ஏத்தி வப்பீங்களா, பிரஸ்  பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் ?

5 comments:

  1. அம்மணி இப்போ ப்ரீயாதான் இருக்கு...இப்பவே அப்ளிகேசன் போட்டு விடுங்க...

    ReplyDelete
  2. அண்ணே உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி. அப்ளிகேஷன்லாம் ஆல்ரெடி அனுப்பியாச்சி.

    ReplyDelete
  3. ஏண்ணே இப்படி அணில் (உதாரணத்துக்கு) கடிச்ச பழத்துக்கு ஆசைப் படறீங்க?

    ReplyDelete
  4. ஒஹோ சார்,

    அணில் கடிச்ச பழமா அது அனகோண்டா கடிச்ச பழம். அம்மணி கூட சேருவதுக்கு ஆசைப்படுங்க, ஆனால் அதுக்கு பேர் லவ் இல்லை கம்பானியன் ஷிப் :-))

    ஊருல மைனருங்க ஆசைப்பட்டா வச்சுக்கிடுவாங்க ஒரு 60 நாளுக்கு அப்புறம் கழட்டி விட்டுருவாங்க, அதே போல இது லேடி மைனர் ,புடிச்சிருந்தா ,கார்,பிளாட்,செல் போன் எல்லாம் வாங்கிக்கொடுத்து வச்சுக்கும், உங்க லக் எப்படினு பார்ப்போம் :-))

    ReplyDelete
  5. ஆசையை வெளிப்படையா சொன்ன உங்க நேர்மையை பாராட்டத்தான் வேணும் சார்! சொல்ல முடியாது.யானை மாலை போட்டு ராஜாவா ஆகிறது இல்லையா அந்த காலத்தில்.

    ReplyDelete