Monday, April 9, 2012

’இயக்குனர் சசிக்குமார்தான் கொலையாளி என்று மலையாளிகள் கண்டுபிடித்து விட்டதால்...

 அண்ணன் தான் ‘ஒத்தவீடு’ பட ஹீரோ. ஆழ்கடல் நீச்சல் வீரராம். எவ்வளவு ஆழத்துல ஸ்விம் பண்றாரு பாருங்க...


மொக்கைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுறதே அயோக்கியத்தனம்,காவாலித்தனம்,மொள்ளமாரித்தனம்,முடிச்சவிக்கித்தனம். அதுலயும் ஒரு பொண்ணு, அதுவும்  ஒரே ஒரு சீனு நிர்வாணமா நடிச்சாங்குறதுக்காக ‘மழைக்காலம்’ படத்துக்கு தனி விமர்சனம் தேவையா ?

நேற்று செல்போனில் நேந்திரங்காய் சிப்ஸாய் பொரிந்தார் ஒரு  நண்பர்.

சரண்யா நாஃக் அருகே அமர்ந்து படம் பார்த்ததால் கொஞ்சம் ஓவராய் உணர்ச்சி வசப்பட்டது அறிந்து, வருந்தி, இனி திருந்த முயல்கிறேன்.

‘ஒத்த வீடு’ என்றொரு ஜடம் ஸாரி படம். அதை இயக்கியவர் பத்திரிகையாளர் பாலன். வாரத்துக்கு மூன்று நாட்களாவது அவரை நேரில் சந்திக்கவேண்டி இருப்பதை முன்னிட்டும், ஆள் கொஞ்சம் தாட்டீகமான பாடிக்காரர் என்பதை எண்ணிட்டும் ஒத்த வீடு பத்தி ஒத்த வரி கூட எழுதாகாமல்,அதனாலேயே பழுதாகாமல் தப்புகிறேன்.

படத்தில் பாலன் பல காட்சிகளில் நடிக்கவும் செய்திருந்தார்.அந்த நடிப்பைப் பத்தியாவது நாலு வார்த்தை எழுதலாமா என்று கை நமநம என்கிறது.ஆனால் பிரஸ் ஷோவுக்கு பாலன் டிபனாகத் தந்த போண்டா, ஏண்டா உனக்கு இந்த வேண்டா வேலை என்கிறது.
 மொத்தத்தில் பாலன், தயாரிப்பாளருக்கு வாய்த்த காலன், என்பதை எதுகை மோனையோடு   பதிவு செய்து,’ஒத்த வீட்டிலிருந்து உடனே பொதிகை எக்ஸ்பிரஸ் வழியாக விடை பெறுகிறேன்.

டிவேல் தனக்குத்தானே சொல்லிக்கொண்டுரவுடியாய்  ஃபார்ம் ஆனமாதிரி, சில டைரக்டர்கள் தங்கள் மொக்கைப்படங்களே ஹிட் படம் போல் ஆக்கிக்கொண்டு, அடுத்த படம் பண்ணும்போது, திஸ் இஸ் எ ஃபிலிம் பை தேட் ஃப்லிம் டைரக்டர்’ என்று கொஞ்சமும் கூச்சமின்றி பெருமை பீத்திக்கொள்கிறார்கள்.

அப்படி ஒரு அரைவேக்காட்டு ‘போர்க்களம்’ தந்த பண்டி சரோஜ் குமார் , இந்த வாரம் புதிதாக ’அஸ்த்த்தமனம்’ என்ற அருவாமனையோடு வந்திறங்கினார்.

பாவம் தெலுங்குக்காரர், தமிழ் சரியாகத்தெரியாததால். தலைப்பில் ஒரு ‘த்’ அதிகமாகப்போட்டுவிட்டாரோ என்று ஒரு உதவி இயக்குனரிடம் கேட்டால், ‘இல்லை சார், கதை ரொம்ப அழுத்தமானதுன்னு சிம்பாலிக்கா சொல்றதுக்காக ஒரு ‘த்’ அதிகமாப்போட்டோம்’ என்றார்.
’உங்களை அப்பாலிக்கா சந்திக்கிறேன்’ என்றபடி தியேட்டருக்குள் நுழைந்தேன்.

கரடுமுரடான ரெண்டு குட்டிகளுடன்,மூன்று முரடுகரடான குட்டன்கள் ஒரு த்ரில் அனுபவத்துக்காக காட்டுக்குள் பயணிக்கிறார்கள்.நாம் தியேட்டருக்குள் பண்டி சரோஜ் குமாரிடம் மாட்டிக்கொண்டது போலவே அவர்கள் காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.அதில் ஒரு மூன்று பேர் கொல்லப்பட்டுவிட, மீதி மூன்று பேர் நாம் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது வந்தது போலவே குற்றுயிரும் கொலையுயிருமாய் தப்பி வருகிறார்கள்.

வித்தியாசமான ஆங்கிள்கள் வைக்கிறேன் பேர்வழி என்று படத்தின் தொண்ணூறு சதவிகித ஷாட்களை செடிகொடிகளுக்கு வைத்துவிட்டு நடிகர்களை அவுட் ஆஃப் போகஸில் காட்டுகிறார்.

படத்தின் ஒரே ஆறுதலான அம்சம்  அது வெறும் 77 நிமிடங்கள் மட்டுமே ஓடியது என்பதே.
பண்டி சீக்கிரமே மீ ஊருக்கு ஜருகண்டி.




ஸ்தமனத்துக்கு அடுத்தபடியாக நம் மனத்தை அவஸ்தைப்படுத்துவதற்கென்றே வந்து சேர்ந்தார்கள், நம்ம  சசிக்குமாரை மலையாளத்தில் அறிமுகப்படுத்தி கையோடு ரிடர்ன் டிக்கெட்டும்  எடுத்துத்தந்த ‘மாஸ்டர்ஸ்’

க்ரைம் த்ரில்லரின் லட்சணமே,கொலையாளியையோ, குற்றவாளியையோ பார்வையாளன் யூகிக்க முடியாமல் இருப்பது.இதில் சசிக்குமார் கதையில் கொஞ்ச நேரம் காணாமல் போனதுமே, கொலையாளி அவர்தான் என்பதை மலையாளிகள் கண்டுபிடித்துவிட்டதால் படம் படு ஃப்ளாப் என்று கேள்விப்பட்டேன்.

படத்தின் ஹீரோ பிரித்விராஜ், சசியை ஏறத்தாழ ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரியே ஆக்கிவிட்டார். படத்தில் நம்ம ஆஞ்சநேயாவின் முன்னாள் காதலி அனன்யா, கோ’ கோவா’ பியா, காதல் சந்தியா என்று மூன்று ஹீரோயின்கள் இருந்தும் யாரும் யாருக்கும் ஜோடியில்லை.[ஃபிகருங்க மேட்டர்ல டைரக்டர் ரொம்ப பொஸசிவ்வான ஆளு போல ]

சந்தியா நடுவில் ஏதோ ஒரு போலி டாக்டரிடம் மூக்கு ஆபரேசன் செய்திருப்பார் போல. மூக்கின் மேல் ஒரு நாலைந்து லாரிகள் ஏழெட்டுவாட்டி ஏறி இறங்கியது போல ஒரு எஃபெக்ட்.

நடிப்பு என்று வந்துவிட்டால் கண்கள் பேசவேண்டும். மாஸ்டர்ஸில் மொழி தெரியாமல் முழி பிதுங்கியதாலோ என்னவோ சசிக்குமாரின் கண்கள் உயிரற்ற சடலங்கள் போலவே இருக்கின்றன.

 இந்த லட்சணத்தில் இவருக்கு ‘புலிக்குட்டி’ என்ற படத்திற்கு சம்பளம் 2 கோடியாம்.

 ஒரு தாடிக்கு ஏன் ரெண்டு கோடி.?

எண்டே குருவாயூரப்பா.. ஈ  ந்யூஸூ  கேட்டோ?

சசிக்குமார் சேட்டனோட க்ரூர க்ரித்தியங்கள் ஸ்டார்ட் ஆவ்நோ?



15 comments:

  1. ஆஞ்சநேயாவின் முன்னாள் காதலி அனன்யா,
    பிகருங்க மேட்டர்ல டைரக்டர் ரொம்ப பொஸசிவ்வான ஆளு போல ]
    சந்தியா நடுவில் ஏதோ ஒரு போலி டாக்டரிடம் மூக்கு ஆபரேசன் செய்திருப்பார் போல.

    :))))

    சிரிச்சு மாளலை

    ReplyDelete
    Replies
    1. சிரிச்சி வாழனும். ஏன் மாளனும்? நன்றி மோகன்குமார்.

      Delete
  2. நண்பர் படத்தை கூட நேர்மையாக விமர்சித்த நேர்மைக்கு நன்றி.
    நான் எனது நண்பர் பாலன் இயக்கிய உடும்பன் படத்தை பார்க்காமலே தப்பித்து வருகிறேன்.

    நான் இன்று சங்கிங் எக்ஸ்பிரஸ் என்ற உலக சினிமாவுக்கு பதிவு போட்டுள்ளேன்.
    வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படித்தேன்.. ரசித்தேன்.உலக மகா ரசிகனுக்கு என் வாழ்த்துக்கள்.

      Delete
  3. காலை வணக்கமுங்க...எப்படியோ...நம்மளை கொன்னு எடுக்கவே இந்த மாதிரி படங்கள் லாம் ரிலீஸ் ஆகுதுன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மொத்தத்துல நேரம் சரியில்ல..

      Delete
  4. எனக்கு உங்க பதிவை படித்ததும் வள்ளி படத்தில் ஒருவர் தன்னுடன் பேசிவிட்டு போன பிறகு அவரை பற்றி ஏக வசனத்தில் திட்டுவாரே! அது தான் நினைவிற்கு வந்தது :-) உங்க கிட்ட பேசி முடித்து கிளம்பியதும்.. ஐயையோ! இனி நம்மை என்ன கூறி திட்டப் போகிறாரோ என்று பாலன் நினைத்து இருப்பாரு :-))

    சந்தியா உங்க பதிவைப் படித்தால் கோபத்தில் அவருடைய மூக்கு என்ன ஆகும் என்று தெரியலை.. ;-)

    ReplyDelete
    Replies
    1. மூக்கு மேட்டருக்கு என்ன சாக்கு போக்கு சொல்லப்போறாங்கன்னு நானும் ஆர்வமா வெயிட் பண்ணிட்டிருக்கேன்...

      Delete
  5. பின்னி பெடலெடுக்கறீங்க தல...நேரில பார்க்கறச்சே உமக்கு அபிஷேகம் நிச்சயம்..(பீர் அபிஷேகம்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் சித்தம், என் பீராபிஷேகம்.

      Delete
  6. தெரியாத்தனமா மறுபடி இந்த பதிவை படிச்சுட்டேன். ஆபிசில் உங்க பதிவை படிக்கவே கூடாது. சிரிச்சி மாட்டிக்குவோம்.கிட்டேன்.

    You Continue :))

    ReplyDelete
  7. உங்களுடைய நகைச்சுவைகளுக்கு பின்னல் நிச்சயம் ஒரு ஆழமான சோககதை இருக்கும் என்று நினைக்கிறேன், அடுத்தவர்களை சிரிக்கவைப்பது அத்தனை சாதாரண விஷம் இல்லை, ரொம்ப நல்லா எழுதறீங்க தம்பி.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
  9. இயக்கியவர் பத்திரிகையாளர் பாலன் - அவரை அதன்பிறகு நேரில் பார்த்து விட்டீர்களா? இன்னும் பத்திரமாக இருக்கிறீர்களா?

    ReplyDelete