Friday, January 27, 2012

இன்னும் எத்தனை பேருக்கு மொட்டை போடலாமுன்னு யோசிச்சிட்டிருக்கேன்’- இயக்குனர் பாலா


கோடம்பாக்கமே இப்போது ஒரு கொத்து புரோட்டா கடை போல் ஆகிவிட்டது. ஆளாளுக்கு தோசைக்கரண்டியை எடுத்துக்கொண்டு பிரச்சினையைக் கொத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி ஊழியர்களுக்குமிடையிலான மோதல் போக்கு மேலும் தீவிரமடைகிறதே ஒழிய சற்றும் தணிகிற பாடாயில்லை. காரணம் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ரேஞ்சில் இஷ்டத்துக்கு ஆளாளுக்கு வார்த்தைகளை விட்டுக்கொண்டிருப்பது.

 அறிக்கை மன்னன் அமீர் பேட்டி கொடுத்த 5 வது நிமிடமே சேரன் அமீரை சிக்கலில் மாட்டிவிட்டு நக்கல் அடிக்கிறார்.பாரதிராஜாவோ இவர்கள் ரெண்டுபேரையும் சேர்த்து வைத்து சாணி அடிக்கிறார். எஸ். ஏ. சந்திரசேகரனோ, 'பெப்சி’ன்னு ஒண்ணைப்பத்தி இதுவரைக்கும் கேள்விப்பட்டது கூட கிடையாது.நாங்கல்லாம் காளிமார்க் சோடா, மாப்பிள்ளை விநாயகர் கலர் மட்டும்தான் குடிக்கிறது என்கிறார்.

இவர்கள் இப்படி கூத்தடித்துக்கொண்டிருக்க, உட்கார,எழுந்திரிக்க,உட்கார்ந்துஎந்திருக்க, எழுந்திருந்து உட்கார என்று எல்லாத்துக்கும் பேட்டா எழுதிய பெப்சி தொழிலாளர்கள்
 புதிய பேட்டாவுக்கு ஒத்துக்கொண்டு நடந்த படப்பிடிப்புகள் ஒவ்வொன்றாக கேன்சலாவதைப்பார்த்து டென்சனாகி ‘ அம்மா ’அப்பாயிண்ட்மெண்ட்  கேட்டு, இன்று எம்.ஜி.ஆரிடம் முறையிட பீச்சுக்குக் கிளம்பிவிட்டார்கள். போயஸ்கார்டன் வட்டாரத்தில் கிடைத்த தகவலின்படி,  எம்.ஜி .ஆரிடமிருந்து தகவல்  வந்த பிறகு, பெப்சி தலைவர்களை அம்மா நாளை அழைக்கக்கூடும் என்கிறார்கள்.

பிரச்சினை இப்படி போய்க்கொண்டிருக்க, எவன் எப்பிடிப் போனா எனக்கென்ன என்று படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நிறுத்த வைப்பதற்குள், தயாரிப்பாளர் சங்கத்தினர் படாத பாடு பட்டுவிட்டார்களாம்.

இதில் கடைசிவரை  ரப்பராய் இழுத்தவர்கள் மூன்று பேர்.முதலாமவர் பாரதிராஜா.பிடிவாதமாய் தேனிக்குக் கிளம்ப இருந்தவரை சென்னையிலேயே தடுத்து நிறுத்த மேற்கண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. என்னோட கலைஞர் டி.வி சீரியல்ல வேலை பாக்குறவங்கள வச்சி’ அன்னக்கொடிய நாட்டப்போறேன் என்று வீராப்பாய் விடை பெற்று தேனிக்குக் கிளம்பிவிட்டாராம்.

 அடுத்து கே.வி ஆனந்த்,’மாற்றான்’ படத்துக்காக ஓ.எம்.ஆர்.ரோடில் சுமார் ஒரு கோடி பட்ஜெட்டில் செட் போட்டிருந்த அவர் இந்த ஃபைட் சீனை மட்டும் முடிச்சிக்கிறேன். இல்லேன்னா செட் வீணாப்போயிரும் என்று எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார்.அதை ஏற்றுக்கொள்ள மறுத்து நேற்றோடு ‘மாற்றான்’ ஷூட்டிங்கை ரத்து செய்தார்கள். இதனால் கே.வி.ஆநொந்து ஆகிவிட்டார்.

கடைசிகடைசியாய்,இன்றுவரை படப்பிடிப்பை பிடிவாதமாய்த் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரே நபர் இயக்குனர் பாலாதான்.’என்னோடது பெரிய பட்ஜெட் படம். கஷ்டப்பட்டு பெரிய கூட்டத்தைத் திரட்டியிருக்கோம். ஷூட்டிங்க பாதியில நிறுத்தினா மறுபடி இவங்கள ஒண்ணு சேர்க்குறது கஷ்டம். இவ்வளவும் போக 200 பொம்பளைங்களுக்கு மொட்டை அடிச்சி , அவங்களுக்கு சட்டை தச்சிக்குடுத்திருக்கேன்.. அதர்வா பயலுக்கு தலையெல்லாம் பொடுகு போட்டிருக்கேன். வேதிகாவுக்கு,விலா எலும்புல ஒண்ண வெளிய எடுத்து வச்சிருக்கேன்’ என்று வரிசையாக மொட்டைச் சாக்குகளைச் சொல்லி படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறாராம் பாலா.

ஒரு பிரச்சினையை ஒட்டி, மொத்த இண்டஸ்ட்ரியுமே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, அதில் ஃபில்டர் சிகரட்டைப்பற்ற வைத்து, தயாரிப்பாளர் சங்கத்தின்  முகத்தில் ஊதுவது பாலாவுக்கு அழகல்ல. இதன் மூலம் அவர் வீணா பாழாப்போகப்பார்க்கிறார் ‘ என்று தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் எச்சரிக்கிறார்கள்.
ஒரே நாள்ல 200 பொம்பளங்களுக்கு மொட்டை அடிச்சவன் நான். படம் ரிலீஸாகிற அன்னைக்கி  புரடியூசர் போக இன்னும் எத்தனை ஆயிரம் பேருக்கு அடிக்கலாம்னு இப்பவே உக்காந்து லிஸ்ட் போட்டுக்கிட்டிருக்கேன். ஒரு படத்துக்கு 500 பேக் அப் சொல்றவன். என் கிட்டயே மேக் அப்பா? என்று வீரியமாய் பதில் விளாசுகிறாராம் பாலா.
பாலா இதற்கெல்லாம் அசருகிற ஆளா?

No comments:

Post a Comment