நேற்று சத்யம் தியேட்டரில் நடந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவைத்தொடர்ந்து, இன்று ஹோட்டல் அக்கார்ட்’ டில் OK OK' டீமின் பிரஸ் மீட் நடந்தது.
முன்பெல்லாம் பிரஸ் மீட்களுக்கு ஐம்பது முதல் அறுபது பேர் வரை வந்து கொண்டிருந்தார்கள். இப்போது வரவர பிரஸ் மீட்களில் ‘உதயம்’ தியேட்டர் ஹவுஸ் ஃபுல் காட்சி போல்,டேப் ரெகார்டர் , வாக்மேன், வானொலி, இணையம்,இணைவோம் என்று பல நூற்றுக்கணக்கில் குவிய ஆரம்பித்துவிட்டார்கள்.
அதுவும் வீடியோ கேமராவுடன் அலையும் ஒளிப்பதிவாளர்கள்,நடிகைகள் வந்தவுடன் அவர்களை ஷூட் பண்ணுகிறேன் பேர்வழி என்று பண்ணுகிற அலம்பல் இருக்கிறதே... அது பின் வரிசைக்காரர்களின் தீராத புலம்பல்.
‘’ பாஸ் [எ] பாஸ்கரன்’ முடிந்தவுடன் அடுத்து என்ன படம் பண்ணலாம் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்த போது, தயாநிதி சாரை என் படத்தின் விநியோகஸ்தராகத்தான் சந்தித்தேன். அப்போது தான் நடிக்கும் எண்ணத்தில் இருப்பதாவும்,ஏதாவது கதை இருந்தால் சொல்ல முடியுமா என்றும் கேட்டார்.
நான் உடனே என்னிடமிருந்த ஒன் லைன் ஒன்றை ஒரு நிமிடத்தில் சொல்லி முடிக்க , அவர் அதை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள உருவானதுதான் இந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்று தனது பேச்சைத்துவங்கிய இயக்குனர் ராஜேஷ், உதயநிதியைப் பற்றிப் பேசிய போது காட்டிய அந்நியோன்யத்தைப்பார்க்கும்போது, அவர் எந்த நிமிடமும் தான் ஒரு அரசியல்வாதி வீட்டுப்பிள்ளை போல நடந்துகொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இதுல யார் கல் , யார் கண்ணாடி?
அப்பிடியெல்லாம் பிரிச்சி சொல்ல முடியாது. காதல்ல ,எதுவும் நிரந்தரம் கிடையாது. கொஞ்ச நேரத்துல எல்லாமே மாறிப்போகுது. ஒரு சீன்ல உதயநிதி கண்ணாடியா இருப்பார் ஹன்சிகா கல்லாயிடுவாங்க. அடுத்த சீன்ல இதுவே தலைகீழா இருக்கும்.
உதய நிதி நீங்க எதிர்பார்த்த அளவு பெர்ஃபார்மென்ஸ் பண்ணியிருக்காரா?
கண்டிப்பா. ஆனா அதுக்கு முதல் காரணம் நாங்க கதை ரெடியான உடனே நிறைய ஒத்திகை பாத்தோம். ஆரம்பத்தில லவ் சீன்ல ரொம்ப சொதப்பலா பண்ணினார். என்ன சார் இந்த சீன்ல நல்ல ரொமான்ஸ் மூடு வேணும் சார்னு சொல்லுவேன். உடனே அவர், சார் ஹீரோயினுக்குப் பதில் அசிஸ்டெண்ட் டைரக்டரை வச்சி ஒத்திகை பாத்தா எனக்கு எப்பிடி சார் ரொமான்ஸ் வரும்? ஷூட்டிங் ஸ்பாட்ல ஹன்ஷிகா வந்து எதிர்ல நிக்கிறப்ப கரெக்டா பண்ணிருவேன் சார்னு சொல்லுவார். அதே மாதிரியே பண்ணிட்டார். உதயநிதி சாருக்கு கண்டிப்பா இது முதல் படம் மாதிரி இருக்காது.
அடுத்து படத்தின் நாயகன் உதயநிதி பேச ஆரம்பித்தார்.
‘’இந்தப்படத்தோட ஹீரோ வாய்ப்பு டைரக்டர் ராஜேஷ் கிட்ட கேட்டு வாங்கின வாய்ப்புன்னு சொல்றதுல எனக்கு எந்த வித தயக்கமும் இல்ல.’ சிவா மனசுல சக்தி’ பாத்ததிலருந்தே நான் ராஜேஷோட தீவிர ரசிகனாயிட்டேன்.’ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு அப்புறம் அவர் மேல அன்பு இன்னும் ஜாஸ்தியாயிடுச்சி. அடுத்த படமும் என்னை வச்சிப்பண்ணமாட்டாரான்னு ஆர்வமா இருக்கேன்.
ஆனா, நீங்க ஆரம்பத்துல மிஷ்கின் டைரக்ஷன்ல அறிமுகம் ஆகுறதா இருந்து ஃபோட்டோ ஷூட் கூட நடந்ததே?
ஆமா நடந்தது உண்மைதான். ஆனா யுத்தம் செய்’ மாதிரியான ஒரு சீரியஸ் சப்ஜெக்ட் தான் அவர் என்னை வச்சி இயக்குறதா இருந்தார். வடிவேலு வசனம் மாதிரி , ’அதுக்கு’ நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு தோணிச்சி. அதனால அந்தப்படத்துல நடிக்கிற எண்ணத்தை டிராப் பண்ணிட்டேன்.
ஹன்ஷிகாவும் உங்களுக்கும் உள்ள நெருக்கமான காட்சிகளைப் பாத்துட்டு திருமதி உதயநிதி என்ன சொன்னாங்க? என்று தயங்கிக்கேட்டால், ‘ஏன் பாஸ் அந்த வயித்தெரிச்சலைக்கேக்குறீங்க,
ஆக்சுவலா எனக்கும் ஹன்ஷிகாவுக்கும் நெருக்கமான காட்சிகளே படத்துல இல்ல. சந்தானத்துக்கும் எனக்கும் தான் படத்துல நிறைய நெருக்கமான காட்சிகள் இருக்குது. அதைப்பாத்து வீட்ல எதுவும் பெருசா ஃபீல் பண்ணலை’’
சந்தானத்திடம் பழகிய தோஷத்தில் சிரிக்காமல் ஜோக்’கடிக்கும் உதயநிதி படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மீது மட்டும் செம காண்டில் இருக்கிறார் என்பது அவரது பேச்சில் பல இடங்களில் தெரிந்தது.
‘’ஆரம்பத்துல கதை ரெடியான உடனே அவர் கிட்டருந்து பாட்டு கிடைக்காம மூனு மாசம் வெயிட் பண்ணினோம். இப்பவும் ரீ-ரெகார்டிங்கை எப்ப முடிச்சித்தருவார்ன்னு தெரியாததால, படத்தோட ரிலீஸ் தேதியை எங்களால சொல்ல முடியலை’’என்று மனசுக்குள் எதையும் வைத்துக்கொள்ளாமல் பிரஸ்மீட்டில் பொங்கினார் உதயநிதி.
மிஸ்டர் ஹாரிஸ் உங்க பாட்டு தான் லேட்டுதான் ,.. உதயநிதி ஹார்ட்டுல ஹீட்டுதான்..

No comments:
Post a Comment