Thursday, March 1, 2012

உன் குத்தமா,என் குத்தமான்னு தெரியலை...ஒன்மோர் போகலாமா?

சேது’வின் க்ளைமேக்ஸ்-ல் விக்ரம் வாழ்க்கையே வெறுத்துப்போய் தானே மெண்டல் ஆஸ்பத்திரி வண்டியில் ஏறிவிடுவதுபோல், மொத்ததமிழகமும் ஏறிவிடலாமா என்று யோசிக்கிற அளவுக்கு ‘3’ படத்துக்கு பப்ளிசிட்டியைக் கிளப்பிவிட்டபிறகும் தனுஷ்-ஐஸ்வர்யா கோஷ்டியின் விளம்பர தாகம் அடங்கவில்லை.

இப்போது பழையபடி, இவர்களது பப்ளிசிடி ஸ்டார் ரஜினியின் பெயரை சூதாட்டத்துக்காக கையில் எடுத்திருக்கிறார்கள்.

தங்கள் வீட்டின் ஒரு அறையில் முதுகோடு முதுகு ஒட்டிக்கொண்டு ஆளுக்கு ஒரு போனில் நியூஸ்களுக்கு பேன் பார்க்கும்  இவர்களின் திருவிளையாடல்களைப்பார்க்க நல்லவேளை சிவாஜி கணேசன் உயிரோடு இல்லை.

ஒரு தினசரி நாளிதழுக்கு போன் போடும் தனுஷ், ‘’இந்த மேட்டர் யாருக்கும் தெரிய வேண்டாம்.ஏன் எழுதக்கூட வேண்டாம். நேத்து ரஜினி அங்கிள் படம் பாத்தாங்க. எக்ஸல்லண்ட்ன்னு சொல்லி என்னையும், ஐஸையும் கட்டிப்பிடிச்சிப் பாராட்டினாங்க. மறுபடியும் சொல்றேன். நீங்க இதை உங்க பேப்பர்ல எழுத வேண்டாம்’’ என்றபடி போனை வைத்துவிட்டாராம்.

உடனே அடுத்த நிமிடம் ,அதற்குப் போட்டியாக வரும் இன்னொரு தினசரி பெண் நிருபருக்கு போனைப்போட்ட ஐஸ்வர்யாவோ, ‘’அப்பா படத்தைப் பார்க்கவே இல்லை. அதற்குள்ளாக அவர் பார்த்ததுபோலவும், படத்தின் க்ளைமேக்ஸில் பாஸிடிவ் எண்டிங் வைக்கச்சொன்னது போலவும் சிலர் எழுதுகிறார்கள். ஏன் தான் இப்படி எழுதித்தொலைக்கிறார்களோ என்று தெரியவில்லை. இப்படி நான் சொன்னதாக போடனும்னு நினைச்சா போட்டுக்கோங்க’ என்கிறாராம்.

அவர்கள் விரும்பியது போலவே இருவிதமான செய்திகளும் வெளிவந்ததை ஒட்டி, இப்போது ரஜினி ‘3’ படத்தைப் பார்த்துவிட்டதாக பத்து பேரும், அவர் பார்க்கவில்லை என்று இருபது பேரும், அவரு பாத்துட்டு பாக்காதமாதிரி இருந்தார் என்று முப்பது பேரும் சதா ‘3’ படத்தைப்பற்றிப்பேசியே சட்டையைக்கிழித்துக்கொள்கிறார்களாம்.

அய்யா, அம்மா  பப்ளிசிட்டி அட்ராசிட்டிகளே, படம் ரிலீஸாகுறப்ப நாங்கஅதைப் பாக்குற கண்டிசன்ல இருக்குற மாதிரி எங்கள வச்சிக்கங்க. எல்லாருமே ஏர்வாடிக்குப் போயிட்டமுன்னா,தியேட்டர்ல பேருபாதி கூட தேறாது.
 **********************************************************
ஸ்டைலிஷ்  நடிகை, 20 க்கும் மேற்பட்ட பாடல்களைப்பாடியிருக்கும் பாடகி, முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேச ஆரம்பித்திருப்பது, கமலின் ‘விஸ்வரூபம்’ பட நாயகி,அடுத்து சிம்புவுடன் வெற்றிமாறனின்’வடசென்னை’யில் ஜோடி சேர இருப்பது என்று இவ்வளவு சமாச்சாரங்கள் கைவசம் இருக்கும்போது, யாராக இருந்தாலும், தன்னடக்கமாக இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான். அதுவும் ஆண்ட்ரியா மாதிரி ஒரு அல்ட்ரா மாடர்ன் அழகியிடம் தன்னடக்கம் பேசாமல் தன்னை அடக்கம் செய்துகொள்ளவேண்டியதுதான்.

நடிப்பு நமக்கு சைடிஷ்’ மாதிரி பாட்டு தான் எனக்கு மெயின் டிஷ்ஷே என்று கழுத்தில் போர்டு மாட்டாத குறையாக பேசிவந்த ஆண்ட்ரியாவின் போக்கில் சமீப காலமாக பாடுவது தொடர்பாக  ஒரு அலட்சிய மனோபாவம்.

இப்போது இசையமைப்பாளர்கள் மத்தியில் ஆண்ட்ரியாவின் ‘தன்னடக்கத்தைப் பற்றி தான் புகைந்து தள்ளுகிறார்கள். அதுவும் இவருக்கு அதிக வாய்ப்புகள் தந்த ஜீ.வி.பிரகாஷ்குமாரின் புலம்பல் தான் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறதாம்.

சங்கீதமே என் கதி என்று கிடந்த பாப்பாவின் மனசு சுதி விலகக்காரணமான சங்கதி என்னவோ மிக சாதாரணமானதுதான்.

முன்பெல்லாம் பாடுவதற்கு அழைத்தால்,’’ தேங்க் யூ சார். இதோ அரைமணி நேரத்துல வந்துடுறேன். நடிப்புல்லாம் எனக்கு பாட்டுக்கு அப்புறம் தான் சார்’’ என்று ஆலாய்ப்பறந்து ஓடிவந்த ஆண்ட்ரியா இப்போது பாடுவதற்கு இசையமைப்பாளர்கள் தொடர்பு கொண்டால், ‘’சாரி பாஸ் ரொம்ப பிஸி. நேர்ல வர நேரமில்ல. டியூனை எனக்கு மெயில் பண்ணுங்க. என்னோட வாய்ஸுக்கு பொருந்துமாதிரி தெரிஞ்சா அப்புறம் பாடுறதைப்பத்தி பேசலாம்’’ என்று இசையமைப்பாளர்களின் பிஞ்சு மனசில் நஞ்சு கலக்குகிறாராம்.அதைக்கேட்டு கீ-போர்டில் கை வைக்க மனசில்லாமல் தவிக்கிறார்களாம் சிலர்.

ஆனால் ஆண்ட்ரியா தரப்போ,’இப்பல்லாம் நிறைய பசங்க ஸ்கூல் முடிச்ச,பேக்கைக்கூட வீட்ல கொண்டுபோய் வைக்காம,   மியூசிக் டைரக்டர்னு சொல்லிக்கிட்டு இங்க வந்துடுறாங்க. நம்மள பாட வைக்கிற சாக்குல ஜொள்ளு விடுறவங்க எண்ணிக்கை ஜாஸ்தியாயிடுச்சி. சுதி சுத்தமா பாடுனாக்கூட ‘ உன் குத்தமா என் குத்தமான்னு தெரியலை ஒன் மோர் போகலாமான்னு கேக்குறாங்க. அதனால தான் டியூனை மெயில் பண்ணச்சொல்லி,சில பேரை அவாய்ட் பண்றோம்’ என்கிறார்கள்.

இதையும் தாண்டி மெயில் பண்ற பசங்க, ஃபெயில் ஆகாம பாத்துக்கங்க ஆண்டிரியா ஆண்ட்டி.

No comments:

Post a Comment