Thursday, March 8, 2012

சேவற்கொடி -முக்கா கம்பத்துல பறக்குது மக்கா

றிமுக இயக்குனர்களின் படத்தைப் பார்க்க நேர்கிற போது, நம்மையும் அறியாமல், அவர் யாரிடம் உதவி இயக்குனராக இருந்தார் என்ற கேள்விக்கு பதில் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.

பனேரி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘சேவற்கொடி’ படத்தை இயக்கியுள்ள சுப்பிரமணியன், இயக்குனர் ராதாமோகனிடம் பணியாற்றியவர்.அவரது ‘அபியும் நானும்’ என்கிற பிரமாதமான படத்துக்கு வசனம் எழுதியவர்.
அப்ப படம் நல்லாருக்க வாய்ப்பிருக்குல்ல’ என்றது  உள்மனசு .

பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி நாயகனாக நடிக்க, ஏற்கனவே ஒன்றிரண்டு சுமாரான படங்களில் நடித்து நம்மோடு ஒட்டும் உறவுமாய் இருக்கிற  மலையாள நடிகை பாமா நாயகியாக நடிக்க, சரியாக இரண்டு கோடியே பத்து லட்சத்தில் உருவான சின்ன[?] பட்ஜெட் படம் இது.

தனது படத்தைப்பற்றி பேட்டி தரும்போதெல்லாம், திருச்செந்தூரில் முருகனுக்கு நடத்தப்படும் சூரசம்ஹாரத்தைப் பின்னணியாகக்கொண்ட படம் இது. கதை முதல் ஆண்டின் சூரசம்ஹாரத்தில் துவங்கி அடுத்த ஆண்டின் சூரசம்ஹாரத்தில் முடிகிறது என்பதாகவே பேசியிருப்பார் இயக்குனர் சுப்பிரமணியம்.

கேட்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கட்டும் என்றோ, அல்லது படம் பிரம்மாண்டமானது என்ற இமேஜ் வரட்டும் என்று நினைத்தோ அவர் அப்படி சொல்லியிருக்கக்கூடும். உண்மையில் படத்துக்கும் சூரசமஹாரத்துக்கும்,அதை ரெண்டு முறை காட்டினார்கள் என்பதைத்தாண்டி, எந்த சம்பந்தமும் இல்லை.

அதைத்தெரிஞ்சிக்க முதல்ல கதையக் கேளுங்க மக்கா.

திருச்செந்தூர் அருகே ஒரு மீனவ கிராமத்தில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி.அவருக்கு எல்லாப் பசங்களையும் போல், பாமாவை பஸ் ஸ்டாப்பில் கண்டதும் காதல் வருகிறது.[ அடுத்த வாட்டி லொகேஷனை மாத்துங்க பாஸ்]

கதையின் இன்னொரு ஏரியாவில், மீன் வேனை சம்பளத்துக்கு ஓட்டிக்கொண்டிருக்கும் பவன், சொந்தமாக வேன் வாங்குவதற்காக, அக்காளை அடமானம் வைத்து நடிகர் வடிவேலு பேக்கரி கடை வைத்தது போல், தன் தங்கச்சியை தன் முதலாளிக்கு, இரண்டாம் தாரமாக கட்டிவைக்க முயல்கிறார்.

இதை ஒட்டி ,பவனின் தங்கை தன் காதலனுடன் ஓடிவிட, பரிசாகக் கொடுத்த வேனை முதலாளி பிடுங்கிக்கொள்கிறார்.  வடிவேலுவுக்காவது பேக்கரி கிடச்சது. நம்ம பயலுக்கு கிடைச்ச வேனும் போச்சே’ என்று சுற்றி இருப்பவர்கள் கிண்டலடிக்க, ’வேன் போச்சே’ என்று வெறிகொள்ளும் பவன், அதற்கு அருண்பாலாஜிதான் காரணம் என்று தவறாக நினைத்து, தனது வேனை வைத்து அருண்பாலாஜியின் பைக்கில் மோத அந்த விபத்தில் அருணின் அம்மா இறக்க, ஆறு மாதங்கள் கழித்து, பவன் மூலமே அந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் அருண், பவனைப் பழிவாங்க , பதிலுக்கு அருணைப் பழி வாங்க பவன் அலைய, கதையும் இடைவேளைக்கு அப்புறம் அடுத்து எங்கே போகலாம் என்று திக்கு  தெரியாமல் அலைகிறது.

பார்க்க லட்சணமாக இருக்கும் அருண்பாலாஜிக்கு, தலைமுடியில் மட்டும் யாரோ பான்பராக் போட்டு துப்பியது போல் ஒரு செம்பட்டைக்கலர்  ஒட்டவில்லை.நடிப்பில் இப்போதைக்கு ரன்னர் அப் தான்.

அதேபோல் பார்க்க பட்சணமாக இருக்கும் பாமாவை தமிழ் சினிமாவுக்கு வாம்மா’ என்று வாய் நிறைய அழைக்கலாம்.அப்படி ஒரு ஹோம்லி லுக்.சின்னச்சின்ன எக்ஸ்பிரஷன்களில்  மனசை அள்ளுகிறார்.

பவனின் தங்கையாக இரண்டே காட்சிகளில் வரும் பெயர் தெரியாத பாப்பா, பார்க்க இலியானா போலவே இருப்பதால் , சீக்கிரமே போகப்போறீங்க டாப்பா.

இசை ’எங்கேயும் எப்போதும்’ சத்யா. அங்கே அப்போது’ இருந்த அளவு இல்லையென்றாலும் ஒன்றிரண்டு பாடல்களை முனுமுனுக்க வைக்கிறார்.

 தன் விருப்பப்படியே படத்தின்  அனைத்துப்பாடல்களையும் எழுதியிருக்கும் வைரமுத்துவின்  காதல் வரிகளில், வறுமையும்,வெறுமையும், முதுமையும் தாண்டவமாடுகிறது.[ சின்னப்பசங்க பொழைச்சிப்போகட்டும் வழிவிட்டு, உலக இலக்கியம் படைக்க கிளம்புங்க கவிஞரே..]

சமீபத்தில் குப்பைகளாய் வந்து விழுந்து கொண்டிருக்கும் புது இயக்குனர்களுக்கு மத்தியில் சுப்பிரமணியன், கொஞ்சம் குறிப்பிடப்பட வேண்டியவர்தான். பாடல் காட்சிகளைப்படமாகியிருக்கும் விதத்தில்,நடிகர்களிடம் இயல்பான நடிப்பை வாங்கிய விதத்தில்,  சூப்பர்மணியான இயக்குனர்தான்.

ஆனால் படத்தின் முதல் பாதியில் நல்ல நம்பிக்கையோடு நம்மை பயணிக்க வைத்தவர், இரண்டாவது பாதியில், வழக்கமான காட்சிகளை வைத்து வழுக்கியிருக்கிறார். அதுவும் கதையில் திடீரென புகுந்த இரு அண்ணாச்சிகளும் சீரியஸ்னஸ்  என்ற பெயரில் காமெடி பிட்’களாக காட்சி அளித்தது டைரக்டருக்கு பெறும் சறுக்கல்.

கதை நடக்கிற திருச்செந்தூர் பாஷையிலேயே சொல்றதுன்னா, கொடி முக்காக் கம்பத்துலதான் பறக்குது மக்கா.

2 comments:

  1. eppadi boss ella mokkai padathaiyum pakuringa

    ReplyDelete
  2. எல்லாம் விதிப்படி தான் பாஸ்

    ReplyDelete