Monday, March 5, 2012

பாஸு பாஸுன்னு கூப்பிட்டே என்ன லூஸாக்கிட்டீங்களேடா

இன்று மதியம் 2 மணி அளவில்,மீண்டும்  நினைவூட்டும் விதமாக ,பி.ஆர்.ஓ. வெங்கட் ,’’பாஸ்  பிரசாத் லேப் தியேட்டர்ல 3 மணிக்கு ‘பத்திரமா பாத்துக்கங்க’ ஷோ இருக்கு வந்துருங்கபாஸ் ’ என்றார் .

’எப்பிடியெல்லாம் டைட்டில் வக்க ஆரம்பிச்சிட்டாங்க, என்று யோசித்தபடி, படம் ரொம்ப ஏடாகூடமா இல்லாம எங்கள பத்திரமா பாத்துக்குவீங்களா பாஸ் ? ‘ என்று அவரைக் கேட்க நினைப்பதற்குள் போனை வைத்துவிட்டார்.

குடும்பத்தையும், காதலையும் கலந்துகட்டி குருமா பண்ணியிருந்தார்கள்.மூன்று நண்பர்கள். அதில் ஒருத்தனுக்கு மட்டும் நாயகி மீது காதல் வருவது. மீதி ரெண்டுபேரும் ஐடியா குடுப்பது. வீட்டில் நாயகிக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க, அதை நண்பர்களுடன் போய் நாயகன் கலைப்பது...இப்படியே கதை எழுதி எத்தனை காலத்துக்குத்தான் பிழைப்பது என்று யோசிக்கமாட்டார்களா? என்று யோசித்தபோது என்னை நினைத்தே எனக்கு அழுகை வந்தது.

இந்த மாதிரி படங்கள் பார்த்து எவ்வளவோ அடிகள்  வாங்கி உடம்பெல்லாம் தழும்பாக இருந்தாலும், அதற்கு தைலம் தடவிக்கொண்டு மீண்டும் மீண்டும் போவது  நமக்கு வாடிக்கையாகி விட்டது.

பிறகு எப்பிடி இவங்க நம்மள  பத்திரமா பாத்துக்குவாங்க?

படத்தில் ஒரு வசனம்;  குண்டு நாயகிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஹீரோவையும் அவரது நண்பர்களையும் பார்த்துக்கேட்பது, அப்படியே டைரக்டர் நம்மைப்பார்த்து கேட்பது போலவே இருந்தது.’’பாஸு..பாஸுன்னு கூப்பிட்டே என்னை லூஸு ஆக்கிட்டீங்களேடா?’

நியாயமாக , மூன்றாவதாக இருக்கும்  மேற்படி டிசைனில், மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட வேண்டியவர்கள் இயக்குனரும், தயாரிப்பாளரும்தான்.


                  
  எனக்கென்னவோ, 3’ படம் ரிலீஸாகிற வரை தனுஷ், ஐஸ்வர்யா, அனிருத் போன்றவர்கள் பற்றி எழுதாமல் யாரும் உயிர் வாழ முடியும் என்று தோணவில்லை.

‘அடுத்த படத்துக்கெல்லாம் நானே மியூசிக் பண்ணப்போறேன் ‘ என்கிறார் தனுஷ். ஐஸ்வர்யாவோ இன்னும் ஒரு ’கட்டை’ மேலே போய், ‘கொலவெறி,  ஒரு கூட்டு முயற்சி மாதிரி, எங்க வீட்டுமுயற்சி’ என்கிறார்.

இன்னும் சில சிம்பு மாதிரி நல்ல தம்பிகளோ, ‘ ‘3’ ஆடியோவுல அந்த ஒரு பாட்டைத்தவிர வேற எதுவுமே ஷெல்ஃப் எடுக்கலை பாத்தீங்களா?’ என்கிறார்கள்.

ஆனால் இவை எவற்றையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் 3’ படத்தின் ஃபைனல் மிக்ஸிங்கில் இருக்கும் அனிருத், தன்னைத்தேடி வருகிறவர்களிடம் சம்பளமாக ஒரு விரலை நீட்டுகிறாராம்.

இதைப்பார்ப்பவர்கள் ஆரம்பத்தில் சற்றுக்குழப்பமடைந்து, சரி சின்னப்பய புள்ள படத்துக்கு மியூசிக் பண்றதுக்கு ஒரு கடலைமுட்டாய் பாக்கெட் கேக்குது போலருக்கு’என்று கன்ஃபியூஸ் ஆகி, சற்று நேரத்திற்குப் பின்னர்தான் அந்த விரல் ஒரு கோடியைக் குறிக்கிறது என்று புரிந்துகொள்கிறார்களாம்.

தான் ஒரு கோடி சம்பளம் கேட்பதற்கான காரணமாக அனிருத் கருதுவது, ‘கொலவெறி மாதிரி ஒரு பாடலை இதுவர தமிழ்சினிமா கண்டதில்ல, முதல் படத்துக்கே இந்திப்படம் பண்ணச்சொல்லி இத்தன பேர் தேடி வந்ததில்ல..மொழி தெரியாதவங்க கூட ஒரு பாட்டை இந்த அளவுக்கு நொந்ததில்ல..    ல்ல .. ல்ல ..ல்ல என்று பெரும் தொல்லையாய் .இப்படியே நீண்டுகொண்டு போகிறது அந்த காரண பட்டியல்.

இதுபோக, பாக்கியராஜின் வாரிசு சாந்தனுவை வைத்து ‘கண்டேன்’ படத்தை இயக்கிய இயக்குனர்,தனது அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கும்படி, பார்ப்பதற்கு அம்மாஞ்சி மாதிரியே இருக்கும்  அனிருத்தை அநியாயத்துக்கு வற்புறுத்தினாராம்.[ டைரக்டரண்ணா பக்கத்துல இருக்க கண் டாக்டரைக் கொஞ்சம் பாத்து செக் அப் பண்ணிக்கங்கண்ணா.]

அனிருத்துக்கு ஒரு ஐடியா, தமிழிலும், இந்தியிலும் இப்போதைக்கு உங்களுக்கு ஒரு கோடி தர யாருக்கும் மனசு வராது. ஆனால் தெலுங்கில் ஒரு’கோடி’ கேட்டால் உடனே கொடுத்துவிடுவார்கள்.அங்கே கோடி என்றால் கோழி என்று அர்த்தம்.சொல்லும்போதே ஜிஞ்சரா,பெப்பரா என்றும் விளக்கமாக சொல்லிவிட்டால் அவர்களுக்கு பரிமாறுவதற்கு ஈஸியாக இருக்கும்.உங்க உடம்பைத் தேத்துவதற்கும்  உங்களுக்கு அந்த கோடியை விட இந்த ‘கோடி’தான் அவசியமும் கூட.

No comments:

Post a Comment