Thursday, January 19, 2012

குமுதம் எழுதுறது சரியில்ல,தனுஷோட சுத்துனது தப்பில்ல, '3' படமோ இன்னும் முடியல.. ஆக மொத்தம் எதுவும் விளங்கல...

தன்னையும், நடிகர் தனுஷையும் இணைத்து மீடியாக்கள் சூடாக வடை சுட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து கொதிக்கும் எண்ணெயாகிறார் ஸ்ருதிஹாசன்.

 தனது வக்கீலை அழைத்து எல்லாப்பத்திரிகைகளுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு போட, வக்கீலோ, முதல்ல யாராவது ஒருத்தருக்கு அனுப்புவோம். அதைப்பாத்தே எல்லாரும் அஞ்சி நடுங்கி, உங்களை விட்டுட்டு அக்‌ஷராவையும் செல்வராகவனையும் பத்தி எழுத ஆரம்பிச்சிடுவாங்க’ என்று ஆலோசனை சொல்ல,அதை ஆமோதிக்கும் ஸ்ருதி,
‘உடனே அப்பாவுக்கும் ரஜினி சாருக்கும் போன் பண்ணி ஏதாவது ஒரு ஆலமரத்தடிக்கு வரச்சொல்லுங்க. இந்த மேட்டரை பஞ்சாயத்து பண்ணி ஒரு முடிவுக்குக் கொண்டு  வரணும்’ என்க..

‘.கட் ’ பண்ணினால் போரூர் தாண்டி  குன்றத்தூர் அருகே, ஒரு ஆலமரத்தடியில், ரஜினி, கமல், தனுஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா, செளந்தர்யா, கஸ்தூரிராஜா, கொலவெறி பாடலுக்கு இசையமைத்த அனிருத்,மற்றும் நாட்டாமை சரத் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள்.
 

எடுத்தவுடன்,ஒரு நெழிந்த பயங்கர அடி வாங்கிய  பழைய சொம்பு ஒன்றில்   வெத்திலையை புளிச்  என்று துப்பியபடி சரத்  தனது ஜபர்தஸ்தைக் காட்டுகிறார். 

சரத்: இந்த நாட்டாமை பேசுறப்ப யாரும் குறுக்க பேசப்படாது. பஞ்சாயத்துன்னு உக்காந்து பஞ்ச் பேசி நல்ல ல்ஞ்ச் சாப்பிட்டு  ரொம்ப நாளாச்சி. அதனால கொஞ்சம் டச் விட்டுப்போச்சி. சரி சொல்லும்மா ஸ்ருதி, குற்றம் நடந்தது என்ன?

ஸ்ருதி: அய்யோ அப்பா இவருக்குல்லாம் யாரு புரோகிராம் சொல்லி அனுப்பிச்சது. நான் கான்வெண்ட் படிக்கிறப்ப இவர் சொன்ன தீர்ப்பக்கேட்டு நாலு நாள் ஜுரத்துல படுத்தது பத்தாதா முதல்ல இவருக்கு பேக்கப் சொல்லுங்க’

கமல்:[லேசாக கணைத்தபடி] அதாகப்பட்டது ஸ்ருதி அவர்களே, நாங்கள் அனைவரும் அனுமானித்தது உண்மையெனில், யாரும் புரோகிராம் சொல்லாமலே, ஒரு பழக்க தோஷத்தின் அடிப்படையிலேயே திரு. சரத் அவர்கள் வந்திருப்பதாக அறிகிறோம்.சபை நாகரீகம் என்ற ஒன்றை தமிழன் நீண்ட நாட்களாக கட்டி மாரடிப்பதை மனதில் கொண்டும், நம் குடும்பப் பிரச்சினைக்கு வெளியில் இருந்து ஒருவர் தீர்ப்பு சொன்னால் நன்றாக இருக்குமே என்றும் நினைத்து அவர் இங்கே நீடிப்பதையே நான் விரும்புகிறேன்.

செல்வராகவன்
: மைண்ட் வாய்ஸில்] தெளிவான விஷயத்தை குழப்பமா பேசுறதை இவர்  எப்பத்தான் நிறுத்தப்போறாரோ? 

கமல்
: செல்வா நீங்க ஏதோ சீரியஸா திங்க் பண்றிங்க போல இருக்கு. அப்படியே அந்த கண்மாய் பக்கமா நடந்து போயிட்டு வந்தீங்கன்னா புதுஷா ரெண்டு சீன் கிடைச்சாலும் கிடைக்கும்.

செல்வா:சார் கண்மாய்ப்பக்கமா போனா மீன் தான் கிடைக்கும் சீன் கிடைக்காது.பொண்ண சரியா கண்டிச்சி வளக்காம விட்டுட்டு வந்துட்டாரு..சீன் சொல்றதுக்கு.

கஸ்தூரிராஜா: வந்த மேட்டரை விட்டுட்டு ஆளாளுக்கு பேசிக்கிட்டே போறீங்களே.. என் சம்பந்தி என்ன சொல்றாருன்னு கேளுங்கப்பா.

ரஜினி:[ தாடியை நீவியபடி], ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததுன்னு கீதையில சொல்லியிருக்கு..அதனால

[ரஜினியை மறித்து கமல் உள்ளே பாய்கிறார்.]

கமல்: எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை என்று சொல்லுவதைவிட அது நடக்கவே இல்லை என்று சொல்லிக்கொள்வதுதான் இங்கிருக்கும் யாவருக்கும் நலம் என்பதாக நான் கருதுகிறேன். இப்படி பேசுவதால் நான் கீதையை மறுக்கிறேன் என்று சிலர் என் மீது பழி சொல்லக்கூடும்.பெற்ற பிள்ளை என்று வருகிற போது கீதையை சற்று இறக்கி வைத்துப்பார்க்கிற பேதையாக நான் இருந்துவிட்டுப்போவதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

ரஜினி: [கொஞ்சம் கோபமாகி] கமல் வரவர நீங்க பேசுறது கால்வாசி கூட புரிய மாட்டேங்குது. ‘விஸ்வரூபம்’ முடிஞ்ச உடனே ருத்ரன், மாத்ருபூதம்  மாதிரி  ஒரு நல்ல டாக்டர் கிட்ட நானே கூட்டிட்டு போறேன்.நீங்க காலாற கொஞ்சம் அந்தப்பக்கம் போயிட்டு வாங்களேன்.பிரச்சினையை நாங்களே பேசி முடிச்சிக்கிறோம். இல்லைன்னா நீங்க என்ன பேசுறீங்கங்கிறத புரிஞ்சிக்கிறதே இங்க இருக்கவங்களுக்கு ஒரு பிரச்சினையாயிடும்.

கமல்: இந்த சபை என் அமைதியைத்தான் விரும்புகிறதென்றால் நான் மவுனம் காக்கத்தயார். பொதுவாக மரம் அமைதியைத்தான் விரும்புகிறது. ஆனால் காற்றுதான் அதை அப்படி விட்டுவைப்பதில்லை.

சரத்
: இந்த நாட்டாமையை மதிக்காம ஆளாளுக்கு ஏதேதோ பேசிட்டுப்போனா எப்பிடி? ஸ்ருதி, தனுஷ் நடந்தது என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?

செல்வா: சார், கமல் சார் சொன்னாரேங்குறதுக்காக ஒரு செட் புராபர்ட்டி மாதிரி பேசாம கம்முன்னு இருந்திங்கன்னா, மத்தியானம், காட்டாமைகறியோட லஞ்சும், வழிச்செலவுக்கு கொஞ்சம் பேட்டாவும் குடுத்து விடுவோம். ஆனா குறுக்க குறுக்க பேசுறதா இருந்தா, இப்பவே ஒழுங்கு மரியாதையா ஒரு கட்டை வண்டிய கட்டிக்கிட்டு, நீங்களும் மாடுகளும் காலாற நடந்து போயிடுங்க.

லஞ்சுக்கு ஆமைக்கறி என்றவுடன் நாக்கை சப்பியபடி சைலண்டாகிறார் சரத்.


இந்த கேப்பைப் பயன்படுத்தி  வயலண்டாக மாறும் தனுஷ்,’’ஏங்க இங்க எங்கதாங்க தப்பு நடக்கல. தப்புன்னா என்னங்க .சரின்னா என்னங்க? ஒரு பையனும் பொண்ணும் சேர்ந்து பழகுறது தப்புன்னா அந்த தப்பை நானும் ஸ்ருதியும் கண்டிப்பா பண்ணுவோங்க. ஸ்ருதி....ஸ்ருதி...ஸ்ருதி... தனுஷ்...தனுஷ்....தனுஷ்... தப்பு...தப்பு..தப்பு... (காதல் கொண்டேன் க்ளைமேக்ஸ் பாணியில் பேசி அனைவருக்கும் தனுஷ் ஜெர்க் கொடுக்க, பதறியபடி அவரை நோக்கி ஒடி வருகிறார் கஸ்தூரி ராஜா.)                                                                                                                                   
           [பஞ்சாயத்து இங்கே தொடருது,வாங்க போகலாம்....]

1.மெத்த வாங்குனேன்.. தூக்கத்த வாங்கலை.. டி.ஆரின் புதிய படம்

2.இதய பலஹீனமுள்ளவர்கள் இதைப்படிக்க வேண்டாம்...பவர் ஸ்டார் 

ஹலோ தமிழ் சினிமா...

4 comments: