Saturday, January 28, 2012

சூப்பர் ஸ்டாரை இப்படியா ஏமாத்துவீங்க எஸ்.ராமகிருஷ்ணன்?


ரஜினியை தன்னுடைய விழாக்களுக்கு அழைப்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் நிறைவான அன்பும் நேர்மையான உறவும் கொண்டவர்கள். இன்னொரு வகையினர் மனமெல்லாம் தந்திரம், நெஞ்செல்லாம் வஞ்சகம் கொண்டவர்கள்.இந்த இரு சாராரையும் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் அறிவார். அதனால் தான் தேர்தல் தினத்தன்று பொன்னர் சங்கர் படம் பார்க்க கலைஞர் ரஜினியை அழைத்த போது,  தேர்தல் நேரம் முடிந்த பின் சென்றார். சில சமயங்களில் ரஜினி அந்தப் பொறியை கவனிக்காமல் விட்டுவிடுவார். அந்த சமயங்களில்தான் பகடைக்காயாகவோ அல்லது பலியாடாகவோ ஆக்கப் படுவார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் அப்படி பகடைக்காயக்கப்படும் நிகழ்ச்சி வரும் 2.2.2012 அன்று நடைபெறுகிறது. இடம் காமராஜர் அரங்கம், விழா  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இயல் சர்வதேச விருது பெறும் விழா.
ரஜினியை வைத்து சதி வலையைப் பின்னியிருப்பவர்கள் எஸ். ராமகிருஷ்ணனும் , மனுஷ்யபுத்திரனும் 
ஒரு எழுத்தாளர் சர்வதேச விருது பெரும் விழா எப்படி ரஜினி பகடைக்காயாகப் பயன்படுத்தப் படும் விழாவாகும் என்று எல்லோருக்கும் தோன்றலாம்.
இதைப் புரிந்து கொள்ள சமீபத்தில் சாகித்திய அகடாமி விருது பெற்ற காவல் கோட்டம் சு. வெங்கடேசன் மற்றும் எஸ். ராமகிருஷ்ணனின்  நீண்ட பகை வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.
மதுரைக்கு அருகில் உள்ள  திருப்பரங்குன்றம் தான் வெங்கடேசனின் ஊர். அவர் தீவிரமான படிப்பாளி. இளம் வயதிலேயே இடது சாரி இயக்கத்தில் தன்னை முழு நேர ஊழியராக ஐக்கியப் படுத்திக் கொண்டவர். தமிழ் நாடு முழுவதும் இருந்து வருகிற இலக்கியவாதிகளை உபசரித்து மகிழ்வதில் முதன்மையானவர். ராமகிருஷ்ணனுக்கும் அவர் செய்த உபசரிப்பு கொஞ்சநஞ்சமல்ல. ராமகிருஷ்ணன் தன்னுடைய தொண்டரடிப் பொடிகளுள் முதன்மையானவர் என்று வெங்கடேசனை கருதி வந்த காலம் அது.
இந்த சமயத்தில்தான் வெங்கடேசன் ஒரு நாள்,  மதுரை வரலாற்றை மையமாகக் கொண்டு நான் ஒரு நாவல் எழுத இருக்கிறேன் என்று தன்னுடைய விருப்பத்தை ராமகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறார். தன்னுடைய தொண்டரடிப்பொடியின் இந்த விருப்பத்தை ராமகிருஷ்ணனால் ரசிக்க முடியவில்லை. ( ஆடுகளம் படத்தின் பேட்டைக்காரன் மன நிலையை நினைவில் கொள்ளுங்கள் ) வேறு வேலை இருந்தால் பாருங்கள் வெங்கடேஷன் என்று சொல்லி விட்டு வந்து விட்டார்.
ஆனால் வெங்கடேசன் வேறு வேலையைப் பார்க்க வில்லை. மதுரை குறித்த நீண்ட ஆய்வில் இறங்கினார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. பனிரெண்டு ஆண்டுகள்.
மதுரையைப் பற்றி எழுத வேண்டும் என்பது ராமகிருஷ்ணனின் கனவு. அதை இன்னொருவர் எடுத்துக் கொண்டால் எப்படி ராமகிருஷ்ணனால் சகித்துக் கொள்ள முடியும். அவர் ஏற்கனவே கண்ணகி பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க அதை ஜெயமோகன் எழுதி விட்டார். மதுரையை வெங்கடேசன் எழுதி விட்டால். அதுவும் தனக்குத் தொண்டரடிப்பொடியாக இருந்த நபர் அப்படி முடிவு எடுத்து விட்டால் ..ராமகிருஷ்ணன் வெங்கடேசனுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டார்.
அவனை வேறு வேலையைப் பார்க்கச் சொல்லுங்கள். நாவலென்ன கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டி போர்டு என்று  நினைத்தானா ஈசியாக தூக்கிச் செல்ல. ஒரு ஈ பீரங்கியை இழுக்க ஆசைப்படுகிறது ..என்றெல்லாம் பல வகைகளில் அலட்சியமாகப் பேசி வந்தார் ராமகிருஷ்ணன். ஆனாலும் வெங்கடேசன் மனம் தளராமல் தொடர்ந்து எழுதி வந்தார். பனிரெண்டு கால ஆய்வு மூன்றாண்டு கால தொடர் எழுத்து இதன் பலனாக ஆயிரம் பக்க நாவலாக காவல் கோட்டம் உருவானது.
வெங்கடேசன் பதிப்பகம் தேடி அலைந்த போது, எந்த பதிப்பகங்களை யெல்லாம் வெங்கடேசன் தொடர்பு கொள்கிறாரோ அந்த பதிப்பகங்களுக் கெல்லாம் ராமகிருஷ்ணன் தொடர்பு கொண்டு அது ஒரு நாவலே அல்ல, அதை வெளியிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பலத்த  நஷ்டம் தான் வரும் என்று எச்சரித்து வந்தார். வெங்கடேசனை அந்த ஆயிரம் பக்கங்களையும் கூவத்தில் கொண்டு வந்து போடச் சொல்லுங்கள். கூவத்தில் தான் அவ்வளவு காகிதங்களை கரைக்கிற அமிலம் நிறைந்திருக்கிறது என்றெல்லாம் நண்பர்களிடம் அலட்சியமாகப் பேசி வந்திருக்கிறார் எஸ்.ரா.
ஒரு வழியாக வெங்கடேசன் தமிழினி பதிப்பகம் மூலம் காவல் கோட்டம் நாவலை வெளிக்கொண்டு வந்தார். ராமகிருஷ்ணனுக்கு ஆத்திரம் தாள வில்லை. அந்த நாவலை காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் என்று தன்னுடைய வலைப் பக்கத்தில் எழுதினார்.சாலையோராம் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்பவனைப் பார்த்திருக்கிறீர்களா. சுளீர் சுளீர் என சாட்டை உடலில் பட்டாலும் விடாமல் அடித்துக் கொள்வானே, அப்படியொரு தண்டனை போல் இருந்தது இந்த நாவலை வாசித்தது என்று எழுதினார். நாவல் ரோடு ரோலர் மாதிரி இருக்கிறது என்று பரிகசித்தார். நூற்றாண்டுகளாக ஒரே புத்தகத்தைப் படித்தால் ஒருவன் எவ்வளவு சலிப்பு அடைவானோ அவ்வளவு சலிப்பு அடைந்தேன் இந்த புத்தகத்தை வாசித்து  விட்டு என்று எழுதினார். நீங்கள் யாரையாவது தண்டிக்க விரும்பினால் இந்த நாவலை வாங்கி பரிசளியுங்கள் என்று எழுதினார். அந்த நாவலை முதலில் வெளியிட சம்மதித்து விட்டு வெளியீட்டு விழா தினத்தன்று காய்ச்சல் என்று பொய் சொல்லி வீட்டில் படுத்துக் கொண்டார்.
 ஒரு புத்தகத்திற்குப் பின்னால் ஒரு எழுத்தாளன், ஒரு பதிப்பகம், ஒரு மொழி, ஒரு வரலாறு இவைகளெல்லாம் இருக்கின்றன என்ற ஒரு சின்ன பிரக்ஞை கூட இல்லாமல் அந்தப் புத்தகத்தை யாரும் வாங்கி விடக்கூடாது என்ற வெறியோடு எழுதினார்.
ராஜபக்ஷே அவ்வளவு தமிழர்களை கொன்று குவித்த போது கூட  பொங்கி எழுதாத ராமகிருஷ்ணன், பாவம் ஒரு முதல் புத்தகம் எழுதிய இளம் எழுத்தாளனுக்கு எதிராக பொங்கிப் பொங்கி எழுதினார். எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ணனின் பாசாங்கற்ற நிஜ கோர முகம் வெளிப்பட்டது அன்றைய தினத்தில் தான்.
அந்தப் புத்தகத்தை இனி ஒரு நபர் கூட வாங்கி வாசிக்க மாட்டார் என்ற சூழலே அன்று ஏற்பட்டது. ஆனால் தெய்வம் அனுப்பியது போல் ஜெயமோகன் களத்தில் குதித்தார். இது போன்ற அறச்சீற்றம் தான் ஜெயமோகனின் பலம்.
உண்மையில் வெங்கடேசன் - ராமகிருஷ்ணன் பகைக் கதை  ஒரு சினிமாக்கதை போல, ஒரு நீதிக்கதை போல, ஒரு சாமிக்கதை போலத்தான் தெரிகிறது. கெடுவான் கேடு நினைப்பான் என்ற நீதியும் பொறுத்தவன் பூமி ஆள்வான் என்ற நீதியும் இணைந்து நிற்கிற கதை அது.
ஜெயமோகன், ‘காவல் கோட்டம், ஒரு நாவல் மட்டுமல்ல தமிழின் மிக முக்கியமான நாவல் என்று ஒரு தொடர் எழுதத் துவங்க காவல் கோட்டத்திற்கு ஒரு பெரிய வாசகர் கூட்டம் உண்டானது. ஜெயமோகனை எதிர்த்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ராமகிருஷ்ணன் தற்காலிகமாகப் பின் வாங்கிக் கொண்டார். ஆனால் போகும் இடமெல்லாம் நாவலையும் வெங்கடேசனையும் புறம் பேசுவதையே தினசரி வழக்கமாக கொண்டார். இதையெல்லாம் ஒரு மௌனமான புன்னகையுடன் மட்டுமே எதிர்கொண்டார் வெங்கடேசன். 
இப்பொழுது ராமகிருஷ்ணன் தலையில் மேலும் ஒரு இடி விழுந்தது.இயக்குனர் வசந்த பாலன் காவல் கோட்டத்தை மையமாகக் கொண்டு அரவான் திரைப்படம் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். அதுவரை சினிமா, தான் குத்தகைக்கு எடுத்த இடம், அங்கே வெங்கடேசன் வரவே முடியாது என்ற நினைத்திருந்த ராமகிருஷ்ணனின் அகந்தைக்கு மற்றுமொரு அடி விழுந்தது.                வசந்த பாலனின் சினிமா படப்பிடிப்பில் நடைபெறுகிற சின்ன சின்ன சறுக்கல்களையும் குழப்பங்களையும் பின்னடைவுகளையும் அது குறித்த தகவல்களையும் சேகரித்து அது குறித்து நண்பர்களிடம் பேசி சிரித்து மனம் தேற்றி வந்தார்.  
லயன் கிங் படத்தில் ஒரு கெட்ட சிங்கம் வரும். அதன் சிரிப்பு வினோதமாக இருக்கும். இது மாதிரி தருணங்களில் ராமகிருஷ்ணன் சிரித்ததும் அப்படித்தான் இருந்தது.
இப்பொழுதுதான் இடிக்கெல்லாம் தலையாய இடியாக ஒரு பேரிடி வந்து ராமகிருஷ்ணன் தலையில் விழுந்தது. சு.வெங்கடேசனுக்கு காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்திய அகடாமி விருது அறிவிக்கப் பட்டது.
உண்மையில் தெய்வம் இருக்கிறது என்ற மீண்டும் உலகில் மீண்டும் நிரூபனமான தினம் அது.
என் கலைக்கிந்த தமிழ் நாடு இணையாகுமா என்று ஹேமநாத பாகவதர் ஆணவத்துடன் பாடினால் கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ? என்று சிவன் பாடி  ஆணவத்தை அடக்குவதுதானே வழக்கம்.
ஒரு எழுத்தை, கலைப் படைப்பை, ஆயிரம் பக்க அபத்தம் என்று எழுதிய எஸ். ராமகிருஷ்ணனை சிவனே வந்து தண்டித்த நிகழ்வு தான் வெங்கடேசனுக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்த நாள்.
  * * * * *
சாகித்திய அகடாமி அறிவிப்பு வந்த நாளிலிருந்து ராமகிருஷ்ணன் மிகுந்த மனப்பதட்டத்துடன் இருந்ததாக அவருடைய நண்பர்கள் சொன்னார்கள்.
பலரும் இருக்கிற சமயத்திலேயே தன்னையும் அறியாமல் விருதென்ன பெரிய மயிரா? என்று சத்தமாக அவர் பேசியதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
சில நாள் தூக்கத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் அலறி எழுந்திருத்திருக்கிறார். அது ஒரு குழப்பமான சத்தம்தான் என்றாலும் டேய் வெங்கடேசா என்கிற மாதிரி அந்த சத்தம் இருந்ததாக  அவர் வீட்டிலிருந்து தகவல்கள் வந்தன. 
* * * * *
இந்த வருட புத்தகத் திருவிழா ராமகிருஷ்ணனுக்கு மிகவும் அவமானகரமான விழாவாக இருந்திருக்கிறது.
எங்கு பார்த்தாலும் வெங்கடேசனுக்கு கட் அவுட். வெங்கடேசனும் புத்தகத் திருவிழா நடந்த அனைத்து நாட்களும் அங்கே வந்து ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து விட்டார். இது வரை புத்தகத் திருவிழாவில் சிங்கம் போல பவனி வந்த ராமகிருஷ்ணன் இம்முறை வாலறுந்த நரி போல நேரே உயிர்மை ஸ்டாலுக்குச் செல்வது அப்படியே வெளியே வந்து விடுவது என்பதாகவே இருந்திருக்கிறார்.
புத்தகத்திருவிழாவில் யாரைப்பார்த்தாலும் காவல் கோட்டம் நாவல் வாங்கி கையில் வைத்தபடியே நடந்திருக்கிறார்கள். இதில் சிலர் ராமகிருஷ்ணனிடம் காவல் கோட்டம் புத்தகத்தை நீட்டி ஆட்டோகிராஃப் கேட்டிருக்கிறார்கள். பிரிண்ட அடித்த ஐயாயிரம்  புத்தகங்களும் விற்றுத் தீர்ந்ததில் தமிழினி வசந்தகுமார் மிகவும் பெருமிதத்துடன் நடமாடியிருக்கிறார். இது போட்டி புத்தக வியாபாரி மனுஷ்யபுத்திரனுக்கு மிகவும் அவமானமாக இருந்திருக்கிறது.
இருவரும் அடிபட்ட நரியாய் காயத்தை நக்கிக்கொண்டு அமர்ந்திருந்த போது தான் கனடாவில் இருந்து இயல் விருதுக்கு எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
இந்த சிறு நெருப்புப் பொறியை வைத்துத்தான் நம் ஈகோவை நாம் தூக்கி நிறுத்திக் கொள்ள முடியும் என்று ராமகிருஷ்ணன் போட்ட கணக்குத் தான் சூப்பர் ஸ்டாரை வைத்து இதற்கு ஒரு விழா எடுப்பது என்கிற முடிவு.
 * * * *
கட்டுரையின் முக்கியமான இடத்திற்கு போவதற்கு முன்பாக இந்த இயல் விருது பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம் நண்பர்களே!
இந்த இயல் விருது என்பது தமிழில் வழங்கப் படுகிற விருதுகளிலேயே சப்பையான விருது.
இந்த விருதை இதுவரை யார்யார் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தால்தான் இந்த விருது எவ்வளவு சப்பையான விருது என்று ஒருவருக்குப் புரியும்
கே. கணேஷ் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். இ.பத்மநாப ஐயர் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். ஏ. சி. தாசியேஸ் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். லஷ்மி ஹோம்ஸ்லோம் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். ஐராவதம் மகாதேவன் வாங்கியிருக்கிறார். இந்த வரிசையில் இப்பொழுது எஸ். ராமகிருஷ்ணனும் வாங்குகிறார்.
இந்த விருது வாங்கிய யாரும் இதைப் போல் ஒரு விழா எடுக்கவில்லை. வெளியில் கூட சொன்னதில்லை. ஏதோ கனவு கண்டால் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்று ஒரு பழமொழி இருக்கிறதே. அந்தளவிற்குத்தான் இந்த விருதை கடந்த காலங்களில் எல்லோரும் பாவித்து வந்தார்கள். .[இந்த விருதுக்குப் பதில் ஒரு எருது கிடைத்திருந்தால் கூட ஏரோட்டிப் பிழைத்திருக்க முடியும்.]
இது சாதாரண விருது என்றால் ரஜினியை விழாவுக்கு கூட்டி வர முடியாதே.
அந்தக் கணத்தில், கேடி பில்லா ராமகிருஷ்ணன் மனதிலும், கில்லாடி ரங்கா மனுஷ்யபுத்திரன் மனதிலும் உதித்த சதிதான் இதை சர்வதேச இலக்கிய விருது என்று சூப்பர் ஸ்டாரிடம் பொய் சொல்லலாம் என்பது. 


கனடாவில் கொடுக்கப்படுகிறது என்பதனால் அது சர்வதேச விருதாகி விடுமா என்ன? கனடாவின் பிரதமர் சர்வதேசப் பிரதமரா ? கனடாவில் விற்கப் படும் பேல்பூரி சர்வதேச பேல்பூரியா? அடப்பாவிகளா?
சின்னக் குழந்தையை சாக்லெட் கொடுத்து ஏமாற்றுவது போல தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரை,  அவர் தமிழ் இலக்கியம் அறியாதவர் என்ற இடைவெளியைப் பயன்படுத்தி இப்படியா ஏமாற்றுவீர்கள்?
சூப்பர் ஸ்டாரை பலரும் அவமதித்திருக்கிறார்கள் . ஆனால் அவர் தமிழ் அறியாதவர் , தமிழ் இலக்கிய சூழல் அறியாதவர் என்பதை உடன் பழகி அறிந்து, அந்த நுட்பமான இடைவெளியைப் பயன்படுத்தி, அந்த வெள்ளந்தியான தலைவனை, வெள்ளை மன தளபதியை வேறு யாரும் ராமகிருஷ்ணனைப் போல் இனி அவமானப் படுத்தி விட முடியாது. 
*******
சூப்பர் ஸ்டார் அவர்களே!
நீங்கள் அந்த விழாவில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அது ஒரு இலக்கிய விழா, சர்வதேச இலக்கிய விருது வழங்கும் விழா என்று நம்பிப் போக வேண்டாம்.
மதுரை மண்ணில், சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய வாழ்க்கையை, இளமையை மக்களுக்கான போராட்டங்களில் கரைத்து, கால் நூற்றாண்டு காலத்தை இலக்கிய வாசிப்பில் செலவழித்து, பனிரெண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து, மூன்றாண்டுகள் செலவழித்து ஒரு நாவல் எழுதி, தன்னுடைய முதல் நாவலுக்கே சாகித்திய அகடாமி விருது வாங்கி, இந்தியாவில் இளம் வயதில் சாகித்திய அகடாமி விருது பெற்ற தமிழன் என்று சாதனை படைத்த ஒரு எளியவனுக்கு எதிராக தன்னுடைய ஆணவத்தைக் காட்ட எஸ். ராமகிருஷ்ணன் நடத்தும் அகம்பாவ விழா என்பதை அறிந்து செல்லுங்கள்!
ராமகிருஷ்ணரே!
வெங்கடேசனை ஒரு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னால் தீர்ந்து போகிற வியாதி தான் உங்களுக்கு வந்திருப்பது. அதை சூப்பர் ஸ்டாரை அழைத்து வந்து விழா நடத்தி பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள்!

பெப்சி விவகாரம்; ரஜினி முதல்வரை சந்தித்த ரகசியம்

24 comments:

  1. எழுத்துக்குள் போட்டியிருக்கலாம். எழுத்தாளர்களுக்குள் போட்டி ஆரோக்கியமானதில்லை. காவல்கோட்டம் புத்தகம் வெளியிட்ட அன்றே எனது நண்பர் இராஜை நந்தன் அதைப் படிக்கச் சொல்லி அறிமுகப்படுத்தினார். அந்த நூல் விருது பெற்றதில் பெரும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. இதுக்குள்ள இம்புட்டு நடந்திருக்கா!!

    ReplyDelete
  3. சார் பின்னிட்டீங்க சார்.. பிரமாதம் போங்க..

    ReplyDelete
  4. மிஸ்டர் ohoproductions ஒரு மேட்டர் தெரியுமா,இதே கனடா இயல் விருத்த போன ஆண்டு "காவல் கோட்டம் "நாவலுக்கு கிடைச்சது.1500 கனடியன் டாலர westernunion money transfer மூலமா அனுப்பிட்டாங்க.பட்டயத்த கொரியர்ல அனுப்பிட்டாங்க.

    ReplyDelete
  5. இலக்கியத்தின் பின்னால் இவ்வளவு அரசியலா..?! :(

    ReplyDelete
  6. மேட்டரை விடுங்க. உங்க எழுத்தும், அதில் ஊடாக பின்னி வரும் நகைச்சுவையும் அபாரம். உங்களின் பல கட்டுரைகளை நீங்கள் தான் எழுதியது என்று தெரியாமல் நக்கீரனிலும் படித்து மகிழ்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  7. ஒவ்வொரு வரியும் அழுத்தமாக இருந்தது,////(உண்மையில் தெய்வம் இருக்கிறது என்ற மீண்டும் உலகில் மீண்டும் நிரூபனமான தினம் அது)..இது மட்டும் இதை நீங்கள் எழுதவில்லையோ என சிந்திக்க வைத்தது//

    ReplyDelete
  8. // சில சமயங்களில் ரஜினி அந்தப் ’பொறியை’ கவனிக்காமல் விட்டுவிடுவார். அந்த சமயங்களில்தான் பகடைக்காயாகவோ அல்லது பலியாடாகவோ ஆக்கப் படுவார்.

    நாம முட்டா பயலா இருந்தா ஒலகம் நம்மள யூஸ் பண்ணிக்கிறது சகஜம் தானே அண்ணே ?

    //ராமகிருஷ்ணன் தன்னுடைய தொண்டரடிப் பொடிகளுள் முதன்மையானவர் என்று வெங்கடேசனை கருதி வந்த காலம் அது.
    // ‘வேறு வேலை இருந்தால் பாருங்கள் வெங்கடேஷன்’ என்று சொல்லி விட்டு வந்து விட்டார்.
    //ராமகிருஷ்ணன் வெங்கடேசனுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டார்.
    // நாவலென்ன கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டி போர்டு என்று நினைத்தானா ஈசியாக தூக்கிச் செல்ல. ஒரு ஈ பீரங்கியை இழுக்க ஆசைப்படுகிறது ..என்றெல்லாம் பல வகைகளில் அலட்சியமாகப் பேசி வந்தார் ராமகிருஷ்ணன்.
    // பதிப்பகங்களுக் கெல்லாம் ராமகிருஷ்ணன் தொடர்பு கொண்டு அது ஒரு நாவலே அல்ல,அதை வெளியிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பலத்த நஷ்டம் தான் வரும் என்று எச்சரித்து வந்தார்

    இதெல்லாம் உண்மையா அண்ணே ? உண்மையா இருந்தா "ரொம்ப கொடும எஸ்.ரா அவர்களே ?" ஆனா ஆதாரம் உண்டுங்களா இந்த மாதிரி எழுதுறதுக்கு ?

    //அந்தப் புத்தகத்தை இனி ஒரு நபர் கூட வாங்கி வாசிக்க மாட்டார் என்ற சூழலே அன்று ஏற்பட்டது. ஆனால் தெய்வம் அனுப்பியது போல் ஜெயமோகன் களத்தில் குதித்தார். இது போன்ற அறச்சீற்றம் தான் ஜெயமோகனின் பலம்.

    இப்போ மட்டும் எப்படி எடது/வலது சாரிகளுக்கு ஜே.மோவ புடிக்குது? உங்களுக்கு வேண்டிய அரசியல பேசுனா யாரையும் புடிக்கும் இல்லீங்களா? ஆனா கொடும..அவரு இந்த சில்லற அரசியலுக்கெல்லாம் வெளிய உள்ளவரு..

    மீதி கட்டுரை எல்லாம் 'சொல்லப்படுகிறது, நம்பப்படுகிறது" மாதிரியான புனைவெழுத்து மாதிரி இருக்குண்ணே ...!!

    ReplyDelete
  9. சேலம் கண்ணன் சொன்ன்துதான்,... இல்க்கியத்தின் பின்னால் இவ்வள்வு அரசியலா?

    ReplyDelete
  10. நன்றி முரளி கண்ணன்.நக்கீரனின் துவக்க காலங்களில் மட்டுமே நான் இருந்தேன்.

    ReplyDelete
  11. ஏற்கனவே நண்பர் எஸ்.ராவுக்கு அதிகமா விளம்பரம் குடுத்துட்டோம்.இருந்தாலும் பரவாயில்லை, சு.வெங்கடேசன் சம்பந்தப்பட்ட எல்லா வயித்தெரிச்சல்களையும் எஸ்.ராவோட இணையதளத்துல தேடிப்படிக்க முடியும்.புனைவெழுத்துல அண்ணன் எஸ்.ராவை நெருங்க இன்னும் யாரும் பிறக்கலை.

    ReplyDelete
  12. மனுஷ்யபுத்திரனின் மனஊனத்திற்கும், சாருவின் ஈனசெருக்குக்கும், ஜெயமோகன் முன்னதாகவே அவதிப்பட்டவர் தானே! பின்பு சபலமும் சேர்ந்து சாருவை சாக்கடையாக்கிவிட்டது !

    தமிழ்-இயல் உலகில் இன்னொரு அருவருப்பு தானோ இந்த எஸ்.ரா.? இவர்களின் எழுத்துக்களை சிலாகிக்கிறோம். வேசித்தனமான மனதுடன் - புகழ்-பணத்துக்காக, இவர்கள் எழுத்துக்கள் வேடமணிகின்றன என்று கருதலாமா?

    இவர்களுக்கு சரஸ்வதி ஸ்ரீதேவியையே கொண்டுவந்தாலும், மூதேவியை பாசத்துடன் கைபிடித்துக்கொள்கிறார்கள் - இந்த அற்பர்கள்.

    'வெங்கடேசன்'கள் மனம் தளர வேண்டாம். 'ஜெயமோகன்'கள் வேண்டும் வரலாறு நம்காலத்தை நினைவு கூர்வதற்க்கு.

    ReplyDelete
  13. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பினரே இவ் விருதை வழங்கி வருகிறார்கள். சென்ற ஆண்டு சு.வெங்கடேசன் 'காவல் கோட்டம்' நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.

    ReplyDelete
  14. எனக்குத் தெரிந்த வரையில் இது உண்மைதான்.. எஸ்.ராவின் வயிற்றெரிச்சல் நாவல் வந்த போதே பல பக்கங்களாக வெளிவந்தது..

    ReplyDelete
  15. நிச்சயம் இது விவாதத்திற்குட்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வாகும். தமிழ் இலக்கிய வெளியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் பரிகாசத்திற்குட்படுத்திக் கொண்டே வருபவர் மனுஷ். இதனால் தான் படைப்பது மட்டுமே அக்மார்க் இலக்கியம் என்றுனிரூபிக்க முயன்று முயன்று... மனுஷ். இவர் கேலி செய்யாத படைப்பாளிகளோ, சிற்றிதழ்களோ தமிழகத்தில் மிகக்குறைவு.அவர் யாரையெல்லாம் உச்சி முகர்கிறாரோ அவர்களையெல்லாம் நாம் கொண்டாட வேண்டும். அவர் யாரையெல்லாம் தூக்கியெறிகிறாரோ அவர்களையெல்லாம் நாமும் குல்லா வியாபாரிக் குரங்குகளைப் போலச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் மனோபாவத்திர்கு ஆளாகிவிட்டார். இது நிச்சயம் ரஜினிக்கு புகழ் சேர்க்கும் நிகழ்ச்சியாக இருக்க முடியாது. ஏனெனில் ரஜினி அதன் உச்சத்தை சங்கர் போன்ற இயக்குனர்கள் மூலம் தொட்டுவிட்டார். சிறப்புரையாற்றும் அளவுக்கு அவரிடம் இலக்கிய அறிவு இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். அதுவும் உயிர்மை விழாவில் சிறப்புரை! எனக்குத் தெரிந்து ரஜினி 100 வார்த்தைகள் பேசினால் அதில் 50 definite இருக்கும்...

    ReplyDelete
  16. 10 but இருக்கும். மீதிச் சொற்கள் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உயிர்மை இதழுக்கு கடிதம் எழுதுவதற்கே தனித்தகுதி இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். உயிர்மை வாசகர்கள் எல்லோருமே சிறந்த படைப்பாளர்கள்தான். முன்னொரு காலத்தில் சோ தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவாளியாகக் கருதப்பட்டார்.இப்போதோ... சோ வுக்குப் பின்வந்து மற்றவர்களை பரிகசிப்பதில் சோ வை மிஞ்சுமளவுக்கு வளர்ந்துவிட்ட மனுஷைப் பார்த்துக் கேட்கத் தோன்றுவது ஒன்றே ஒன்றுதான். 'எப்படி இருந்த நீ...

    ReplyDelete
  17. 10 but இருக்கும். மீதி என்ன பேசுவார் என்பதும் நீங்கள் அறிந்ததே.உயிர்மைக்கு ஒரு கடிதம் எழுதுவதற்கே தனித்தகுதி இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். ஏனெனில் உயிர்மை வாசகர்கள் உலகத்தர வாசகர்கள். முன்னொரு காலத்தில் சோ தமிழகத்தின் தலை சிறந்த அறிவாளியாகக் கருதப்பட்டார். இப்போதோ தலை சிறந்த கோமாளியாகிவிட்டார். சோ வுக்குப் பின்வந்து முதலாவது இடத்தை பிடித்திருக்கும் மனுஷ் இதை உணர வேண்டும். மனுஷைப் பார்த்து கேட்கத் தோன்றுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 'எப்படி இருந்த நீ...

    ReplyDelete
  18. இவங்களுக்குள்ள இவ்ளோ அரசியல் இருக்கா? ....விருப்பு வெறுப்பில்லாமல் எல்லா எழுத்தாளர்களையும் படிக்கும் என் போன்றவர்களுக்கு இலக்கியத்தின் பின்னால் நடக்கும் இது போன்றவைகள் ஆச்சர்யத்தையும் எரிச்சலையும் தருகிறது . (இதுக்குத்தான் ரிஷி மூலம் பாக்க கூடாதுன்னு சொல்றாங்க ). சாரு நிவேதிதா கூடத்தான் காவல் கோட்டத்தை திட்டியும் , அவமதித்தும் எழுதி வந்தார் . இதை எழுதியவர் அவரை விட்டுட்டாரே ...

    ReplyDelete
  19. உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு வெங்கடேசனும், எஸ்.ராவும் போதாதா?? தாஸியேஸ், பத்மநாப ஐயர் எல்லாம் யார் என்று ஞானசூனியங்கள் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தேவையுமில்லை!!!

    ReplyDelete
  20. நாவலுக்கு பின்னால் உள்ள அரசியல் புரிந்தது. நீங்களே இவ்வளவு கோபப் படறீங்களே பாஸ் ?

    ReplyDelete
  21. பிரமாதம்.. துணையெழுத்தில் ஒரு உண்மை சம்பவம் பற்றி எழுதியிருந்தார் அண்ணன் எஸ்.ரா. அதை குறும்படமாக எடுக்கலாமா என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.. எனக்கு எவ்வளவு ராயல்டி கொடுப்பீர்கள்? சார் ..இது உண்மை சம்பவமா..இல்லை உங்கள் கற்பனையா என்று கேட்டேன்...பதிலில்லை..

    ReplyDelete
  22. தமிழ நாட்டை விட்டு சென்று பல வருடங்கள் ஆகிறது.

    தற்போதுள்ள இலக்கியவாதிகளான ராமகிருஷ்ணன் மற்றும் தனுஷ்புத்திரன் பற்றி படிக்க எதாவது link இருக்கா!

    ReplyDelete
  23. எஸ்.ராமகிருஷ்ணன் உடன் இருக்கும் தனிப்பட்ட நட்பு, வெகு காலப் பழக்கம் இதற்காக ரஜினி அந்த விழாவில் கலந்து கொண்டார். அவரை ஏமாற்றி பங்கேற்க வைத்ததாக நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லை.

    http://www.youtube.com/watch?v=rOca96S6YS0
    http://www.youtube.com/watch?v=OL48l-DHVgM

    ReplyDelete