Friday, March 23, 2012

பழையபடி படிச்சிட்டு...உங்க கதைய முடிச்சிட்டுப் போங்க சார்...


         முன்குறிப்பு: நான் இதை எழுத ஆரம்பிக்கும்போது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாகவே உள்ளேன். தயவு என்னை எதாவது ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்.

கடந்த செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களும் தொடர்ச்சியாக, முறையே ‘காதல் பிசாசே’, நந்தா நந்திதா’ ‘காதலிச்சிப்பார்’ ஆகிய படங்களை, இடைவேளையோடு கூட ஓடிவிடாமல் முழுதும் பார்த்தேன்.[ இதை டைப் அடித்துக்கொண்டிருக்கும்போதே, ‘அண்ணா, இன்னைக்கு லேப் தியேட்டர்ல, கரண் நடிச்ச ‘கந்தா’ இருக்கு. வந்தா நல்லாருக்கும்னு லந்தா ஒரு மெஸேஜ் வருது]

அந்தப்படங்களுக்கு தனித்தனியாக விமர்சனம் எழுதினால், ஏதாவது கூலிப்படையுடன் கூட்டணி வைத்து என்னைக் குமுறி விடுவீர்கள் என்பதால் மொத்தத்தையும் கலந்துகட்டி தரலாமே என்று முடிவு செய்தேன்.

ட்ரீம் ஆர்ட் கொலையேஷன்ஸ் சார்பாக வதை, திரைவதை,வஜனம் எழுதி, இயக்கி தயாரித்து, கதாநாயகனாக நடித்து நம் கழுத்தை அறுப்பவர் இலங்கைத்தமிழரான அரவிந்த ரத்தின சிவலிங்கம்.

லட்சியவாதியான மாணவியை, இன்னொரு லட்சியவாதியான மாணவன் காதலிக்கிறான். பிறகு காதலினால் லட்சியம் அலட்சியமாகிறதே என்று மும்பை போகிறான்.

அங்கே நீங்க,  நானு,  மற்றும் அவனே எதிர்பாராமல் மும்பையின் நம்பர் ஒன் டாண் ஆகிறான்.

அவனைப்பிடிக்க முடியாமல் மும்பைப்போலீஸ் முக்க ,அவர்கள் சென்னை போலீஸின் உதவியை எதிர்பார்க்கிறார்கள்.சென்னையில் ஐ.பி.எஸ். முடித்திருக்கும் அவன் காதலியே துப்பாக்கியோடு காதலனைத் துரத்துகிறாள்.

மொத்தப்படமுமே, மவுண்ட்ரோட்டில் மொட்டை வெயிலில் நின்று பிச்சை எடுக்கும் உணர்வைத்தருவதால், படத்துக்கு ’காதல் பிசாசு’ என்று வைத்ததற்குப்பதில் பேசாமல்   ‘காதல் பிச்சைக்காசு’ என்று டைட்டில் வைத்திருக்கலாமோ என்ற உணர்வையும் தவிர்க்க முடியவில்லை.

படத்தின் ஹீரோயினாக ‘கருத்தம்மா’ ராஜ்யஸ்ரீயின் தங்கை மிதுனா நடித்திருக்கிறார். இதைத்தவிர வேற எதுனா’ லும் பொறுத்துக்கலாம் என்கிற அளவில் நடிக்கிறார் மிதுனா.

டுத்த ‘அருவாமனை, ‘நந்தா நந்திதா’ . பேப்பர் விளம்பரங்களில் பேரைப்பார்க்கும்போதே,’ வந்தியா என்னப்பாத்து நொந்தியா?’ என்று மனதில் தோன்றிக்கொண்டே இருந்த படம் இது.

 ஆனால் அதெல்லாம் ரொம்பக்கம்மி என்று நினைக்கும் அளவுக்கு என்னைக்கும்மி எடுத்துவிட்டார்கள்.

முக்கியமாக இந்தப்படத்தின் ஹீரோ ஹேமச்சந்திரனைப்பற்றி கூறியாக வேண்டும்.

இவருதான் மும்பையில நம்பர் ஒன் டாண்ண்
நான் எடுத்து போட்டிருக்கும் ஸ்டில்லை தொடர்ந்து பத்து நிமிஷம் பார்க்கச்சொன்னாலே உதைக்க வருவீர்கள். இவரை நான் இரண்டேகால் மணிநேரம் பார்த்தேன்.

 லாங் ஷாட்டில் பார்த்தேன். மிட் ஷாட்டில் பார்த்தேன். க்ளோஸ்-அப்பில் பார்த்தேன்.ஏன் டைட் க்ளோஸ்-அப்பில் கூட பார்த்தேன்.

அவர் ஆடுவதைப்பார்த்தேன். பாவத்தோடு பாடுவதைப்பார்த்தேன். அவ்வளவு ஏன் இருந்த ஒரு சிலரும் தியேட்டரை விட்டு ஓடுவதையும் கூட பார்த்தேன்.

ஆனால் நான் ஓடினேனா இல்லை அண்ணனை அடுத்தடுத்த காட்சிகளில் தேடினேன்.

இந்தப்படத்தைப்பார்த்து, நான் அடித்திருக்க வேண்டிய சரக்கை எனக்குத்தராமல் படம் முழுக்க அவரே அடிக்கிறார். சரக்கு அடிக்காத கேப்களில், பெரியபெரிய சைஸ்களில் இருக்கும் ஸ்டண்ட் யூனியன் அண்ணன்களை சர்வசாதாரணமாகப் பந்தாடுகிறார். இவர்களை அடித்தது போக மீதி நேரங்களில் அக்கா மேக்னா ராஜை லவ்வுகிறார்.

குரூப்  டான்ஸர்களெல்லாம் முகத்தைக்காட்டாமல் தலைவிரித்து ஆடும் ஒரு பாட்டு தமிழ்சினிமா இதுவரை கண்டறியாதது. தமிழனுக்கு நேரம் நன்றாகஇருக்கும் பட்சம் இனி ஒரு முறை  கூட காணக்கூடாதது.

வரவர நாசரை வில்லனாகப்பார்த்தால் அடக்கமாட்டாமல் சிரிப்பு தான் வருகிறது. பேசாமல் வடிவேலு இடத்தை நிரப்ப அவர் ட்ரை பண்ணலாம்.

டுத்து பார்த்து, வெந்து,நொந்து,அந்து, நான் சந்துசந்தாய் அலைந்தபடம், ‘காதலிச்சிப்பார்’.

டிசைன்களை பார்க்கும்போதே,’ முடிஞ்சா  வந்து பார்’ என்பதுபோல்தான் இருந்தது.

64 லட்சணங்களும் பொருந்தியவன் அரவான்’ என்று தந்ததுபோல், கூட ஒரு பத்து பட்சணங்கள் சேர்த்து, 74 லட்சணங்கள் பொருந்தியவர் நம்ம ‘காதலிச்சிப்பார்’ ஹீரோ  விகாஸ் என்றே விளம்பரம் தந்திருக்கலாம் என்பது என் ஏழ்மையான யோசனை. பிகாஸ் படத்தோட தயாரிப்பாளரே அண்ணன் விகாஸோட அப்பாருதான்.

இந்தப்படத்தோட கதைய ஒரு ரெண்டு வரியாவது சொல்லலைன்னா... எனக்கு பைத்தியமே புடிச்சிடும். சொன்னா...

அண்ணன் விகாஸ் சங்கீதமே எல்லாமுன்னு ஒரு இங்கிதத்தோட வாழுறவரு. அண்ணி மேக்னா நாயர் அவரோட டியூன்ல மயங்க, அண்ணனோ அது மியூசிக் மேல வந்த மயக்கம்னு எடுத்துக்காம, தன் மேல வந்த லவ்வுன்னு நினைச்சி அண்ணியை கவ்வ பாக்குறாரு. அதைத்தெரிஞ்சிக்கிட்ட அண்ணி பதறி அண்ணனை உதறி விடுறாங்க....

சார்..சார்.. கம்ப்யூட்டரை அவசரமா ஷட் டவுண் பண்ணிட்டு எங்க ஓடுறீங்க..?



அண்ணனை நீங்க இன்னைக்குப் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம்




பழையபடி முதல்ல இருந்து  படிச்சிட்டு... உங்க கதைய முடிச்சிட்டுப் போங்க சார்







16 comments:

  1. உங்களுக்காவது இப்படி பிளாக் எழுத்கி இந்த படங்கள் தந்த மன அழுத்தத்தை அழுத்திட்டீங்க மேற் குறிப்பிட்ட மூன்று படங்களையும் உங்களைப்போலவே பிரஸ் ஷோவில் பார்த்த என் நண்பர் சுரேஷ் நேற்றிலிருந்து தலைவலியால் துடிக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. ப்ளாக்ல எழுதுனா மன அழுத்தம் குறையுமா? அப்பிடி ஒரு மூடநம்பிக்கையா நண்பா?
      நண்பர் சுரேஷ் தலைவலிக்கு ஒரு அருமையான மருந்து இருக்கு. சரக்கு அடிச்சி தலைவலி வர்றப்ப, பழையபடி அதாலேயே அதை அடிச்சி விரட்டுற மாதிரி, அந்த மூனு படங்களையும் திரும்ப ஒரு தடவை பாக்கச்சொல்லுங்க. தலைவலி போயே போச்.போயிந்தி. இட்ஸ் காண்.

      Delete
  2. அடேங்கப்பா.. உங்க மனசு எப்படி இரும்பால செஞ்சதா? எப்படிங்க இவ்ளோ மொக்கையையும் பார்த்திருக்கீங்க... முடியலை...

    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
    Replies
    1. இரும்பு இல்லண்ணே கரும்பால செஞ்சது. அதானால அவங்க எவ்வளவு கடிச்சாலும் தாங்குறோம்.

      Delete
  3. Replies
    1. புரடியூசரை அரெஸ்ட் பண்ணி புழல் சிறையில போட்டுட்டாங்க.அதனால ஷோ கேன்சல்.

      Delete
  4. //ஆண்மை குறையேல்....//

    பின்னூட்டம் போட்ட இந்த நண்பரோடு பேரே சும்மா முருங்காய் மாதிரி நங்குன்னு நட்டுக்கிட்டு நிக்குதே?

    ReplyDelete
    Replies
    1. பெண்மை மட்டும் ஏன் குறையனும் யுவா?

      Delete
  5. இனிமே ஒரு படத்துக்கும் உங்களை யாரும் கூப்பிட மாட்டாங்கன்னு நினைக்கிறேன். எப்பூடி ..?

    ReplyDelete
  6. நானும் அந்த நல்ல விஷயம் எப்பவாவது நடந்துறாதான்னு பாக்குறேன். ம்ஹும் நோ சான்ஸ்...

    ReplyDelete
  7. ஹலோ! கம்யூட்டரை ஏன் ஷட் டவுண் பண்ண வேண்டாம்ன்னு சொல்றீங்க.....இந்த படத்தையெல்லாம் பார்க்கறதுக்கு கோட்டரை போட்டுட்டு குப்புற படுக்கப்போறேன் ஆமா!

    ReplyDelete
  8. இந்த வாரம் இது மாதிரி ஆறு படம் இருக்கு.அதுக்குள்ள டென்சனானா எப்படி சுரேஷ் ? ஆறு மனமே ஆறு...

    ReplyDelete
  9. அண்ணே.. இது மாதிரி தொடர்ந்து எழுதுங்க..! அப்பத்தான் நான் தப்பிக்க முடியும்..!

    ReplyDelete
  10. நீங்கள்லாம் தப்பிக்கிறதுங்குறது இந்த ஜென்மத்துல கிடையாது. நெக்ஸ்ட் பெர்த்-ல முடியுதான்னு முயற்சிப்போம்.

    ReplyDelete