Tuesday, March 27, 2012

காந்தியைக் கண்டு ஓட்டம் பிடித்த பிரபாகரன் - விமரிசனம்’ முதல்வர் மகா ஏமாத்மா’

    ஆயுத பலத்தைக் கொண்டு உலகத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட, உள்ளுக்குள்
இருக்கும்காமக்குரோதஉணர்ச்சிகளை வென்றுவிடுவது அதிகக்கஷ்டமாக எனக்குத்தோன்றுகிறது
                                       - தனது சத்திய சோதனையில் ’வெறும்’ காந்தி

இந்த அருமையான் ஸ்டில் நடிகர் கபீர்பேடியின் ட்விட்டரில் சுட்டது

நாங்கல்லாம் துப்பாக்கிய தூக்க ஆரம்பிச்சா’-காந்தி

மீதிப்பரிச்சையை நான் பிட் அடிச்சாவது எழுதாம மேலோகம் போக மாட்டேன்

  சற்றுமுன்னர்தான் ஃபோர் ஃப்ரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில்,’முதல்வர்  மகாத்மா’ படம் பார்த்துவிட்டு வந்தேன். ஏற்கனவே ‘காமராஜ்’ படம்  எடுத்து,பெருந்தலைவர்  காமராஜர் மேலிருந்த மதிப்பை கணிசமான அளவில் காலி  செய்திருந்த அதே பாலகிருஷ்ணன் தான், இப்ப காந்தியையும் கையில் எடுத்து,  எழுதி, இயக்கி தயாரித்து வியாபாரித்தும் இருக்கிறார்.

ஸ்கூல் பசங்களின் நாடகம் போல என்று இப்போதெல்லாம் எழுத பயமாக இருக்கிறது.ஏனென்றால், ஸ்கூல் பசங்க பல விதங்களிலும் நம்ம கோடம்பாக்க ஆசாமிகளை விட ஷார்ப்பாகவே இருக்கிறார்கள். ஸ்கூல், காலேஜ் நாடகங்கள், இங்கே வருஷத்துக்கு ரிலீஸாகும் 90 சதவீத பிணாத்தல் படங்களை விட நன்றாகவே இருக்கின்றன.

நாம பாலகிருஷ்ணனின் ‘முதல்வர் மகாத்மா’வுக்கு வருவோம்.

கோட் ஷேவால் சுடப்பட்டு மேலோகம் போய்க்கொண்டிருக்கும் காந்தி, நடுவழியிலேயே முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார். நான் இந்தியாவுக்காக பாதிப்பரிட்சை தான் எழுதியிருக்கேன்.இன்னும் கொஞ்சம் மக்களை டார்ச்சர் பண்ண வேண்டியிருக்கு, அதனால பூலோகத்துக்கு உடனே ஒரு ‘ரிடர்ன்’ டிக்கட் போடுங்க’ என்று எமனிடம் அடம்பிடித்து, வழக்கம் போல் அவனிடமும் உண்ணாவிரத டார்ச்சரைக் கையாண்டு பழையபடி பூமிக்கே வந்துவிடுகிறார்.

அப்படி வந்தவர், கரம் சந்த் காந்தி என்பதை மறைத்து, தனது பெயரில் மோகன் தாஸ் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, பழையபடி மக்களுக்காக போராட ஆரம்பிக்கிறார்.

இறுதியில், வெள்ளைக்காரர்களைவிட, இப்போதிருக்கிற அரசியல் கொள்ளைக்காரர்கள் அதி பயங்கரமானவர்கள் என்பதைப்புரிந்து கொண்டு ‘ரிடர்ன் டிக்கட்டை கேன்சல் செய்து கொண்டு அவசர அவசரமாக மேலோகம் பறக்கிறார்.

என்ன கதையில் இன்னும் முதல்வர் வரவில்லையே என்று பார்க்கிறீர்களா?

மேற்படி கதையை, அவரிடம் பயின்று ஒரு மாநிலத்தின் நல்ல முதல்வராக இருக்கும் அனுபம் கேர் ,அனுபவம் கேராக மாறி சொல்லி வருகிறார்.மகாத்மா காந்தியிடம் பயின்று முதல்வரானதால் ‘முதல்வர் மகாத்மா’.

படம் முடிந்து வெளியே வந்தவுடன், வாசலில் வழிமறித்து நின்று கொண்டிருந்த இயக்குனர் பாலகிருஷ்ணனிடம்,’’ பொதுவா எடிட்டருக்கு அனுப்பி, படத்தை எடிட் பண்ணினதுக்கு அப்புறம் தான் பிரஸ் ஷோ வே போடுவாங்க. நீங்க ஷூட்டிங் முடிஞ்சி டெவலப் பண்ணுன உடனே அப்பிடியே எங்களுக்கு போட்டு காட்டீட்டிங்களே சார்? என்று கேட்க தொண்டை வரை வார்த்தைகள் வந்துவிட்டன.

இன்னைக்கி காலைல ஷேவ் பண்றப்பவே ரத்தக்காயம் பாத்தாச்சி, மறுபடியும் எதுக்கு ரிஸ்க் என்று அதை மென்று தின்றுவிட்டேன்.

எடிட்டிங் மட்டுமின்றி படத்தின் அத்தனை அம்சங்களுமே, தொழில் நுட்பமா அப்பிடின்னா என்னாங்க என்று நம்மை பகடி பண்ணி கபடி ஆடுகின்றன.

இந்த விநோத கற்பனையின் உச்சக்கட்டமாக , விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனும், காந்தியும் ஒரு கடற்கரையில் அவசர அவசரமாக சந்தித்துக்கொள்கிறார்கள். பிரபாகரனுக்கு காந்தி அஹிம்சையின் அவசியத்தைப்பற்றி வண்டி வண்டியாக அட்வைஸ்களை அள்ளி வழங்குகிறார்.

யாராவது ரொம்ப அறுக்கும்போது, நமக்கு நாமே மிஸ்டு கால் கொடுத்து  எதிரில் இல்லாத ஒரு ஆளிடம், ‘ஹலோ ஸாரிம்மா லேட்டாயிடுச்சி.அஞ்சே நிமிஷத்துல அங்க இருப்பேன்’ என்று சொல்லாமல்கொள்ளாமல் எஸ்கேப் ஆவோமே, அதே போலவே ஒயர்லெஸ்ஸில் ஒரு கால் வர காந்தியிடமிருந்து அவசரமாகத் தப்பி ஓடுகிறார் பிரபாகரன்.

எல்லோருக்குமே, சில பிடித்த தலைவர்கள் இருப்பது மாதிரி, சில பிடிக்காத தலைவர்களும் இருப்பார்கள்.

அப்படி உங்களுக்கு  மட்டும் பிடிக்காத ஒரு  தலைவரை, எல்லாருக்கும் பிடிக்காத தலைவர் ஆக்க விரும்பினால், கொஞ்சமும் யோசிக்காமல் உங்க காடுகரையை வித்தாவது, பாலகிருஷ்ணர டைரக்டரா வச்சி படம் எடுங்க.அப்ப பாப்பீங்க கைமேல் பலனை.

14 comments:

  1. இதுவும் second ரிலீஸ் ஆ? ஏற்கனவே வந்து யாரோ(ஹசாரே?) பாத்தாங்கனு படிச்ச மாதிரி நியாபகம்..
    நெஜமாலுமே ஒரு doubt...வெங்காயம் படத்த எல்லா டைரக்டரும்(ட்ரைலர்ல தான்) பாராட்டுராங்களே ...மெய்யாலுமா??

    ReplyDelete
  2. ஸெகண்ட் ரிலீஸ் இல்ல... ரொம்ப நாளா ரிலீஸ் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டேயிருக்காங்க.அதனால உங்களுக்கு அப்பிடி ஒரு ஃபீலிங்ஸ்...

    ReplyDelete
  3. அண்ணே

    3 நாள் முன்னாடியே படத்தை காலி பண்ணிட்டியே . .

    மகாத்மா பாவம் மன்னிக்காது . . . அண்ணே . .

    அன்னா ஹசாரே படத்தை பாத்துட்டு சொல்லாம கொல்லாம

    எஸ்கேப் ஆயிட்டாராமே . .

    ReplyDelete
    Replies
    1. இனிமே சென்னைப்பக்கமே வரமாட்டேன்.’முதல்வர் மகாத்மா’ படம் காட்டி என்னைக்கொல்ல சதின்னுட்டுப் போயிட்டாராம்....

      Delete
  4. விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனும்

    நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
  5. நீங்க சொல்லுறதை பார்த்தா படத்தை (படமா இல்ல டாகுமெண்டரியா) பொதிகை டிவியில கூட வாங்க மாட்டாங்க போல இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. இயக்குனர் அதை சன் டிவி யிலயே விக்கிற அளவுக்கு சாம்ர்த்தியசாலி...

      Delete
  6. சார், ரொம்ப மன உளைச்சல்லே இருக்கேன். கொஞ்சம் கருணை காட்டுங்க சார். வீட்லே எல்லோரும் சினிமாவுக்கு கூட்டிகிட்டு போ, கூட்டிகிட்டு போ என்று ஒரே கொடைச்சல். 1500 ரூபா செல்வு பண்ண ரெடியாகி சினிமாவுக்கு போக ரெடியானாலும், அந்த சினிமா சரியில்லை இந்த சினிமா சரியில்லை என ஒரே கூவல். திரைக்கு வர படங்கள் முதல் ஷோ பாதியிலேயே பெட்டிக்குள் போயிடுது, போற சினிமாவும் போறதுக்குள்ளே தூக்கிடறானுங்க. சக்சஸ்புல்லா பார்த்த ஒரு கர்ணன் சினிமாவையும் பழைய சினிமாவுக்கு கூட்டிட்டு போயிட்டாருன்னு ஒரே திட்டு.

    அதனாலே கண்ண மூடிகிட்டு இந்த படத்தை பாருங்க ஒரு விமர்சனம் எழுதுங்க. நம்பி போய் பார்ப்போம். புண்ணியமா போகும். நன்றிகடனா எல்லா பதிவுக்கு வந்து இருபது பின்னூட்டம் போடறேன் கொஞ்சம் காப்பாத்துங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. வீணாபோன படங்களா பாக்கனும்னு எனக்கு மட்டும் விதியாண்ணே...அப்பிடி ஏதாவது நல்ல படம் வந்தா பதிவுல போட்ட உடனே முதல் தகவல் அறிக்கை உங்களுக்குத்தான்...

      Delete
  7. வெங்காயம் படம் செகண்ட் ரிலீசாவதையொட்டி முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தையும் செகண்ட் ரிலீசாகப்போறாங்காளாமே ?சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று கிராமத்துப்பக்கம் ஒரு பழமொழி உண்டு நீங்களாவது எல்ரெட் குமார்க்கிட்ட எங்க கழுத்தை எத்தனை முறை அறுப்பிங்கன்னு கொஞ்சம் கேட்டுசொல்லுங்கண்ணே

    ReplyDelete
    Replies
    1. அப்பிடியெல்லாம் சொல்பேச்சு கேக்குறவரா இருந்தா இப்பிடி ஒரு படம் எடுத்திருப்பாரா?

      Delete
  8. ஒஹோ சார்,

    குயிக் கன் முருகன் படம் பார்த்தப்ப இதே போல காந்தியும் திரும்ப வந்து , இங்கே நடக்கிற அட்டகாசத்த பார்த்துட்டு தாதா ஆகிறா போல ஒரு கதை என் மனத்திரையில புரொஜெடர் இல்லாமா ஓடிச்சு , உங்க நல்ல நேரம் அப்போ என் கையில காசு இல்லை , இருந்திருந்தா நீங்க என்னையும் இப்படி வாழ்த்துறா போல ஒரு படம் எடுத்திருப்பேன்.

    அனேகமா பால கிருஷ்ணனும் குயிக்கன் பார்த்திருப்பார் போல (நான் ரம்பாவுக்காக போனேன் அவர் என்னத்துக்கு போனார்)

    ReplyDelete
    Replies
    1. குவிக் கன் முருகன்’ கொஞ்சம் சுவாரசியமான படமாச்சே... அதையெல்லாம் இவர் பாத்திருக்க வாய்ப்பே இல்ல வவ்வால் சார்...

      Delete
  9. vவவ்வால்!உங்க காட்டுல மழை!தெரியாத படம் பேரா சொல்லிகிட்டு இருக்குறீங்க!ஏ.பி.நாகராஜனுக்கு அப்புறம் வண்டு முருகன் தான் பிரபலம்:)

    ReplyDelete